ஓபிஎஸ் போட்டதெல்லாம் நாடகம்.. துரோகிகள் விலகி தெளிந்த நீரோடையாக அதிமுக! திண்டுக்கல் சீனிவாசன் பளீர்!
திண்டுக்கல்: திமுகவை தீய சக்தி என பலமுறை சொன்ன ஓ.பன்னீர்செல்வம் இப்போது அப்படி சொல்லவில்லை என சொல்லி இருக்கிறார், அதிமுகவை பிளவு படுத்தி திமுகவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் செயலாற்றிக் கொண்டிருந்தார் ஓபிஎஸ் என விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன். மேலும், துரோகிகள் எல்லாம் விலக்கி விட்ட பிறகு தெளிந்த நீரோடையாக தேர்தல் போராட்டத்திற்கு கிளம்பி விட்டது அதிமுக எனவும் கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரியின் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஆதரவாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.
பின்னர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில்," ஓபிஎஸ் திமுகவில் இணைந்துள்ளார். வார்டு கவுன்சிலராகி சேர்மன் ஆனார். ஜெயலலிதா பதவியில் இருந்து விலகு கூட சூழ்நிலையில் டிடிவி தினகரன் ஓ பன்னீர்செல்வத்தை ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தி முதலமைச்சர் ஆக்குங்கள் என கூறினார். ஓபிஎஸ் அவர்களை ஜெயலலிதா முதலமைச்சராகினார்.

ஓபிஎஸ் திமுக
அதிலிருந்து மூன்று தடவை முதலமைச்சரானார். அவர் அண்ணா திமுகவில் எவ்வளவு பெரிய முக்கிய பதவிகளில் இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். தற்பொழுது தாய் கழகத்தில் சென்று இணைந்துள்ளேன் எனக் கூறுகிறார். தீய சக்தி திமுகவையும் கருணாநிதியும் ஒழிப்பது தான் எனது கடமை என சொல்லி 72 ல் அண்ணா திமுக கட்சியை ஆரம்பித்தவர் எம்ஜிஆர். திமுகவை தீய சக்தி என பலமுறை ஓ பன்னீர்செல்வம் சொல்லி இருக்கிறார். ஆனால் தற்பொழுது நான் எப்ப சொன்னேன் என கேள்வி கேட்கிறார். கட்சியை பிளவு படுத்தி திமுகவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் செயலாற்றிக் கொண்டிருந்தார். அதனால் தான் அவர் ஒதுக்கி வைக்கப்பட்டார்.
ஓ பன்னீர்செல்வம் நாடகம்
அவரோடு இருந்த ஜேசிடி பிரபாகரன், மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் இவர்கள் எல்லாம் போனதுக்கு பின்பு வேறு வழியின்றி தற்பொழுது திமுகவில் ஐயப்பன் எம்எல்ஏ உடன் சேர்ந்துள்ளார். இது அவருடைய விருப்பம். அதிமுகவே சேர்வதற்காக நேற்று இரவு வரை பன்னீர்செல்வம் காத்திருந்ததாக சொன்னார்கள். அவரது நாடகத்திற்கு ஒரு அளவு இல்லை. நேற்று முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். எதுக்காக நாடகம் ஆடினார்? எதற்காக காத்திருந்தார்? என்பது நமக்கு என்ன தெரியும்? இவர் காத்திருக்கிறார் என்று தகவலா தெரியும், டெல்லியில் இருந்து உத்தரவு வருவதற்கு. இது எல்லாம் ஏமாற்று வேலை.
எடப்பாடி பழனிசாமி
பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் 2026 பாஜகவை சேர்ந்த 20 பேர் தமிழக அமைச்சராக பொறுப்பு ஏற்பார்கள் எனக் கூறியுள்ளார். இறைவன் அனுமதித்தால் எடப்பாடியார் தலைமையில் சட்டசபை உறுப்பினர்கள் ஆவார்கள். இறைவன் அனுமதித்தால் ஒரு சிலர் அமைச்சர்களாக ஆவார்கள் என அவரது விருப்பத்தை சொல்லி உள்ளார். முறைப்படி அதிமுக பிஜேபி சேர்ந்து இருப்பது அதனுடைய தலைமை எடப்பாடியார் என்பதை தெளிவாக சொல்லியுள்ளனர். இதில் எந்த குழப்பமும் இல்லை.
2026 சட்டசபை தேர்தல்
210 தொகுதிக்கு மேல் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். துரோகிகள் எல்லாம் விலகி விட்ட பிறகு தெளிந்து நீரோடையாக போராட்டத்திற்கு கிளம்பி விட்டோம். தேர்தல் போராட்டத்தில் மக்கள் ஆதரவு எங்களுக்கு உள்ளது. நாங்கள் என்ன செய்யப் போகின்றோம் என்ற கோரிக்கை எல்லாம் கொடுத்தாகி விட்டது. பத்தாயிரம் கொடுக்கின்ற கோரிக்கையை பொதுமக்கள் வரவேற்கின்றனர். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் 210 தொகுதிக்கு மேல் தனி பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடியார் முதலமைச்சர் ஆவார்" என்றார்.
-
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
திமுக எங்களுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கியதில் திருப்தி இல்லை.. இருந்தாலும்! சிபிஎம் சண்முகம் பேட்டி! -
Election Exclusive: அன்னைக்கே சொன்னாரே அன்புமணி.. திமுகவில் சேலம் அருள்? ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனை! அப்போ ராமதாஸ்? -
திமுக - சிபிஎம் இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தானது.. 5 இடங்கள் ஒதுக்கீடு! முடிவுக்கு வந்தது நீண்ட இழுபறி -
காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை? -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
ஓ.பன்னீர்செல்வத்திடம் ஏடாகூட கேள்வி.. சட்டென டென்ஷனான பெரியகருப்பன்












Click it and Unblock the Notifications