மனைவி மஞ்ச தாலி கழட்டியதுமே மிரண்ட "3வது கணவன்".. திண்டுக்கல்லை திணறடித்த மோகனா.. தள்ளாடுது தமிழகம்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: நாளுக்கு நாள் தமிழகத்தில் குடிபோதையால் ஏற்படும் வன்முறைகள் அதிகரித்தபடியே உள்ளன.. டாஸ்மாக்குகளை இழுத்து மூடவேண்டும் என்று பல அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும்நிலையில், மதுபோதையால் ஏற்படும் கொலைகள் பெருகி கொண்டேயிருக்கின்றன. என்ன நடந்தது திண்டுக்கல்லில்?

தமிழ்நாட்டை பொறுத்தளவில், டாஸ்மாக்குகள் மூலம் கிடைக்கும் வருவாயே பிரதானமாக கருதப்படுகிறது.. அரசுக்கு கிடைக்கும் மொத்த நிதி ஆதாரத்தில் 3ல் ஒரு பங்கு வருமானம், டாஸ்மாக், மதுக்கடைகள் மூலமாகவே கிடைத்து வருவதாக சொல்கிறார்கள்.

Dindigul Wife

நம்முடைய மாநிலத்தில் மொத்தம் 4829 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் வருடத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானமும் கிடைத்து வருகிறது. அதாவது சராசரியாக தினமும் 150 கோடி ரூபாய்க்கும், விடுமுறை தினங்களில் அதிகமாகவும் மதுபானங்கள் விற்பனையாகின்றன. வாரவிடுமுறை, பண்டிகை தினங்கள் என்றால் இது டபுளாகிவிடும்.

வருவாய்: அரசுக்கு வருவாய் கிடைக்கிறது என்றாலும், பள்ளி மாணவிகள் முதல் வயதான தாத்தாக்கள், பெண்கள் வரை போதை பழக்கத்திற்கு அடிமையாகிவருகிறார்கள்.. இதனால் பல்வேறு குற்ற சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருவது கவலையை தந்து கொண்டிருக்கின்றன..

நாகம்மாள் என்ற 35 வயது பெண், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த முறையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏற்கனவே 2 கல்யாணம் ஆகிவிட்டது. ஆனால், 10 வருடங்களுக்கு முன்பு தன்னை விட 11 வயது குறைவான 26 வயது மணிவண்ணனை 3வதாக திருமணம் செய்து கொண்டார். மணிவண்ணன் கூலி வேலை செய்து வருகிறார்.

இவர்கள் 2 பேருமே ஒன்றாக சேர்ந்து தண்ணி அடிப்பவர்கள். மணிவண்ணன் தினமும், நாகம்மாளுக்கு மதுபானம் வாங்கி கொடுத்து பாலியல் தொந்தரவு தந்துவந்துள்ளார்.. அந்த வகையில் நேற்றுமுன்தினம் இரவு மணிவண்ணன் மற்றும் மனைவி நாகம்மாள் ஆகியோர் ஒன்றாக வீட்டிலேயே மதுகுடித்துள்ளனர்.

மணிவண்ணன்: பிறகு மணிவண்ணன் போதையில் நாகம்மாளுக்கு வலுக்கட்டாயமாக பாலியல் தொந்தரவு தந்துள்ளார். ஏற்கனவே போதையில் இருந்த நாகம்மாள், மணிவண்ணன் செய்கையால் கடுப்பாகி, தன்னுடைய கழுத்தில் இருந்த தாலி கயிறை கழற்றி மணிவண்ணன் கழுத்தில் மாட்டி இறுக்கி துடிக்க துடிக்க கொன்றுவிட்டார். இப்போது நாகம்மாள் சிறையில் உள்ளார்.

இதுபோலவே நேற்றுமுன்தினம் திண்டுக்கல்லிலும் ஒரு "போதை" கொலை நடந்துள்ளது.. திண்டுக்கல்லிலிருந்து பழனி செல்லும் சாலையில் முருக பவனம் என்ற பகுதி உள்ளது.. இங்குள்ள இந்திரா நகரில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார்.. இவருக்கு 45 வயதாகிறது.. இவர் அதே பகுதியில் திண்டுக்கல் - பழனி சாலையில் லாரி பாடி கட்டும் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி பெயர் மோகனா தேவி.. இவர்களுக்கு திருமணமாகி 20 வருடங்களுக்கு மேலாகிறது.. 2 பிள்ளைகள் இருக்கிறார்கள்..

சேமியா கம்பெனி: மோகனா தேவி, தன்னுடைய வீட்டுக்கு பக்கத்திலிருக்கும் பிரபலமான சேமியா கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்திருக்கிறார். தினமும் வேலைநேரம் முடிந்துவிட்டால், மது அருந்துவதை பழக்கமாக வைத்திருக்கிறார் கண்ணன்.

இத்தனைக்கும் கண்ணன் வீட்டுக்கு பக்கத்திலேயே டாஸ்மாக் கடை இருக்கிறதாம்.. அதனால் வேலை முடிந்ததுமே, அங்குதான் நிறைய நேரம் இருப்பாராம்.. குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியை அடித்து துன்புறுத்துவது, தெருவில் ரகளை செய்வது, குழந்தைகளுக்கு தொல்லை தருவது, வீட்டு வாசலில் நின்று சத்தமிடுவது இப்படி பல்வேறு தொந்தரவுகளை கண்ணன் செய்து வந்துள்ளதாக தெரிகிறது.

மோகனா தேவி: இப்படித்தான் நேற்றைய தினமும் குடித்து விட்டு, வீட்டுக்கு வந்த கண்ணன், மோகனா தேவியிடம் தகராறு செய்துள்ளார்.. உச்சக்கட்ட போதை தலைக்கேறிவிடவும், ஒருகட்டத்தில் நிலைதடுமாறிய கண்ணன், வீட்டிற்குள்ளிருந்து கத்தியை எடுத்து வந்து மோகனா தேவியை குத்த முயன்றுள்ளார்.. இதனால் பயந்துபோன மோகனா, கத்தியுடன் தன்னை நோக்கி பாயும் கண்ணனை, கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில் கண்ணணுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.

கீழே தள்ளிவிட்டதால், கண்ணன் மேலும் ஆத்திரமடைந்தார்.. இதனால் கத்தியுடன் ஆவேசமாக எழுந்தார்.. இதனால் தன்னை குத்தி கொலை செய்து விடுவாரோ என்று பயந்துபோன மோகனா, கண்ணன் வைத்திருந்த கத்தியை பிடுங்கி, அவரது கழுத்து, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்திவிட்டார்.

கொடுமை: இதனால் ரத்த வெள்ளத்தில் கண்ணன் சரிந்து விழுந்து, துடிதுடித்து இறந்தார்.. தகவலறிந்து வந்த போலீசார், கண்ணனின் சடலத்தை கைப்பற்றி திண்டுக்கல் மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர். குடிபோதையில் ஏற்பட்ட தகராறு, கத்திக்குத்தி , கொலை வரை சென்றுள்ள நிலையில், இந்த தம்பதியினரின் 2 குழந்தைகளும் தாய், தகப்பனின்றி கலங்கி நிற்கிறார்கள்.. இந்த மதுபோதை இன்னும் என்னென்ன செய்ய போகுதோ????

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+