அது என்ன மஞ்சள் பைத்தியம்? தீவு தாண்டிய “அரக்கர்கள்” - திண்டுக்கலில் திக் திக் - உயிர்களுக்கு ஆபத்து
திண்டுக்கல்: நத்தம் அருகே மலையடிவாரத்தில் விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் ஊடுருவி இருக்கும் மஞ்சள் பைத்தியம் எறும்புக் கூட்டத்தால் திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து இருக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை அடுத்துள்ளது வேலாயுதம்பட்டி கிராமம். இங்குள்ள கரந்தமலை அடிவாரத்தில் மஞ்சள் பைத்தியம் என்ற அரிய வகை எறும்புக் கூட்டம் சில மாதங்களாக அதிகளவில் காணப்பட்டு வருகிறது.
இந்த எறும்புகள் அப்பகுதியில் உள்ள விளை நிலங்களில் இருக்கும் பயிர்களையும், காய்கறிகளையும் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் அல்லல்பட்டு வருகிறார்கள்.

அச்சுறுத்தல்
பயிர்கள் மட்டுமின்றி மனிதர்கள், வன விலங்குகள், கால்நடைகளையும் இந்த மஞ்சள் பைத்தியம் எறும்புகள் விட்டுவைப்பதில்லை. உடல்களின் மீது கூட்டமாக ஏறி கடித்துக் வைப்பதாக புலம்புகின்றனர் கிராம மக்கள். மலையில் வாழும் காட்டெருமைகள், முயல், மான், குள்ளநரிகள், மயில் போன்றவை இதனால் பாதிக்கப்படுகின்றன.

அதிகரிக்கும் எண்ணிக்கை
மண் நிறத்தில் இருக்கும் இந்த மஞ்சள் பைத்தியம் எறும்புகள் ஊர்ந்து வருவதை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. இதனால் அவற்றை தடுப்பதும் சிரமமான காரியமாக இருக்கிறது. தொடர்ந்து மஞ்சள் பைத்தியம் எறும்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்து இருக்கின்றனர்.

ஆய்வு
இது குறித்து தகவலறிந்த பெங்களூரு அசோகா சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் ஆய்வு அறக்கட்டளையை சேர்ந்த பூச்சியியலாளர் பிரியதர்ஷன் தர்மராஜன் தலைமையிலான குழுவினர் திண்டுக்கல் கரந்தமலை அடிவாரத்தில் உள்ள கிராமங்களுக்கு சென்றனர். அங்கு அதிகளவில் காணப்பட்ட சில மஞ்சள் பைத்தியம் வகை எறும்புகளை எடுத்துச் சென்று அவர்கள் ஆய்வு மேற்கொண்டு இருக்கின்றனர்.

கிறிஸ்துமஸ் தீவு
ஆய்வுக்கு பிறகே எறும்புகளை கட்டுப்படுத்துவது எப்படி என்பது தெரியவரும் என்று அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். முதல் கட்டமாக எறும்புகளின் அச்சுறுத்தலில் இருந்து தற்காத்துக்கொள்ள சில மருந்துகள் மக்களிடம் வழங்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து ஆய்வுக்குழுவினர் வெளியிட்ட அறிக்கையில், இந்த மஞ்சள் பைத்தியம் எறும்பு இந்திய பெருங்கடலில் இருக்கும் கிறிஸ்துமஸ் தீவிலிருந்து பெரும் கூட்டமாக உள்ளதாக கூறியுள்ளார்கள்.

அழிந்த நண்டுகள்
மஞ்சள் பைத்தியம் எறும்புகள் தாக்கியதில் அங்கு ஏராளமான நண்டுகள் உயிரிழந்து இருப்பதாகவும், பகல் மற்றும் இரவு நேரங்களில் இவை இரைதேடும் என்றும், மற்ற நாடுகளில் மஞ்சள் பைத்தியம் எறும்புகளால் ஏற்பட்ட பேரழிவை உணர்ந்து, இங்கு இதை தடுக்காவிட்டால் சுற்றுச்சூழல் அழிந்து தாவரங்கள், உயிரிழனங்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்று கூறியுள்ளார்கள்.

வராத விலங்குகள்
இந்த எறும்புகள் இருக்கும் இடத்தில் வேறு பூச்சி இனங்கள், சிறிய விலங்குகள் இருக்காது என்றும், திண்டுக்கல் வேலாயுதம்பட்டியிலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளார்கள். மஞ்சள் பைத்தியம் எறும்புகள் விலங்குகளின் கண் மற்றும் பிறப்புறுப்பில் தென்பட்டுள்ளதாக கூறியுள்ள ஆராய்ச்சியாளர்கள், இந்த விவகாரம் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications