Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசியலிலிருந்து ஓய்வு பெறுகிறாரா ஐ.பெரியசாமி! ஆத்தூரில் அடுத்து யார்? அடித்து பேசும் உடன்பிறப்புகள்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திமுகவின் மிக மூத்த நிர்வாகிகளில் ஒருவரும் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும், அவரது மகள் இந்திராணி ஆத்தூரில் களமிறங்க இருப்பதாக கடந்த சில தினங்களாகவே கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் திட்டமிட்டு சிலர் இது போன்ற தகவலை கசிய விட்டு வருவதாகவும், ஆத்தூரில் ஐ.பெரியசாமி 2026ல் போட்டியிடுவது உறுதி எனவும், தேர்தல் வேலைகளை பல மாதங்களுக்கு முன்பே அவர் தொடங்கி விட்டார் என்கின்றனர் திமுக உடன்பிறப்புகள்.

திமுகவில் தென் மாவட்ட சீனியர்களில் மிகவும் முக்கியமானவர் ஐ.பெரியசாமி. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தமிழக அரசியல் வரலாற்றிலேயே இல்லாத அளவு 1 லட்சத்து 34 ஆயிரத்து 151 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்.

தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்க செய்தவர். தற்போதும் சென்னை, திண்டுக்கல், ஆத்தூர் என சுறுசுறுப்பாக அரசியல் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே ஆத்தூரில் இந்த முறை ஐ.பெரியசாமி போட்டியிட மாட்டார் என தகவல் கசிந்து வருகிறது.

DMK I Periyasamy dindigul

ஐ பெரியசாமி

மேலும், அவர் போட்டியிடாமல் அவரது மகள் இந்திராணியை களமிறக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது. அவரது மகனும் பழனி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஐபி செந்தில்குமார் திண்டுக்கல் தொகுதியில் களமிறங்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. திண்டுக்கல்லில் திமுக நேரடியாக சில ஆண்டுகள் களமிறங்காத நிலையில் அந்த குறையை போக்க அவர் களமிறங்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் ஐ.பெரியசாமி ஓய்வு பெற போகிறார் என்ற பேச்சுக்கே இடமில்லை என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

திமுக சீனியர்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர்கள்," எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து மிகவும் தீவிரமாக பணியாற்றி வந்த காலத்தில் வத்தலக்குண்டுக்குள் அவரை நுழைய விட மாட்டேன் என பேசி தமிழக அரசியல் களத்தையே அதிரவிட்டவர் ஐ.பெரியசாமி. அதன் பிறகு அவர் திமுக ஒன்றிய செயலாளராகவும் சேர்மேனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1989 ஆம் ஆண்டு ஆத்தூரில் களமிறங்கி வெற்றி பெற்ற ஐ.பெரியசாமி திமுகவின் மாவட்ட செயலாளராக இருந்தார்.

ஐபி ஆதரவாளர்கள்

அதற்குப் பிறகு திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். தொடர்ந்து 1996, 2001, 2006, 2016, 2021 என தொடர் வெற்றி பெற்று வருகிறார். இதற்கிடையே கலந்த சில தினங்களாக சில விஷமிகள் வயது மூப்பு காரணமாக ஐபி ஆத்தூர் தொகுதியில் போட்டியிட மாட்டார் எனவும், அவரது மகள் களமிறங்க போகிறார் என கிளப்பி விட்டு வருகின்றனர். உண்மையில் அப்படியெல்லாம் இல்லை. ஆத்தூர் என்றாலே ஐ.பெரியசாமி என்பதை தாண்டி, தென்மாவட்டங்களில் ஏதாவது பிரச்சனை என்றால் கூப்பிடு ஐபி-ஐ என கலைஞர் சொல்வார் என திமுகவின் தலைவரான ஸ்டாலினை சொல்லியிருக்கிறார்.

ஆத்தூர் தொகுதி

அந்த அளவுக்கு திண்டுக்கல் மட்டுமல்லாது தேனி உள்ளிட்ட பகுதிகளிலும் மிகுந்த செல்வாக்கோடு இருப்பவர். ஆத்தூர் தொகுதியில் அவர் போட்டியிட்டால் பிரச்சாரத்திற்கு செல்லாமல் கூட அவரால் வெல்ல முடியும். அந்த அளவுக்கு தொகுதி மக்களோடு நன்கு பழக்கம் இருக்கிறது. வயது மூப்பு காரணமாக அவர் ஓய்வெடுக்கப் போகிறார் என்பதெல்லாம் வதந்தி தான். இப்போதும் சென்னை -திண்டுக்கல்- ஆத்தூர் என சுறுசுறுப்பாக அரசியல் செய்து வருகிறார். ஆத்தூர் தொகுதி மட்டுமல்லாது திண்டுக்கல் மாவட்டத்தில் எந்த ஒரு பகுதியில் திமுக நிகழ்ச்சி என்றாலும் தவறாமல் கலந்து கொள்கிறார்.

2026 தேர்தல்

அது மட்டுமல்லாமல் கட்சி அலுவலகத்திற்கு வந்து நிர்வாகிகளை சந்திப்பது பொதுமக்களின் குறைகள் தீர்ப்பது என சுறுசுறுப்பாகவே இயங்கி வருகிறார். 2026 தேர்தலிலும் அவர் போட்டியிடுவது உறுதி தான். மேலும் ஆத்தூரில் அவர் களமிறங்கவில்லை என்றால் வேறு திமுகவினர் களமிறங்க கூட யோசிப்பார்கள் என்பதுதான் உண்மை. அதுமட்டுமல்லாமல் பல மாதங்களுக்கு முன்பே ஆத்தூரில் தேர்தல் வேலைகளையும் அவர் தொடங்கி விட்டார்" என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+