ஞாபகம் இருக்கா திண்டுக்கல் பாஜக சரஸ்வதியை? பழனி கோயில்ல மோடிக்காக மடிப்பிச்சை கேட்டாரே? இப்ப பாருங்க
திண்டுக்கல்: திண்டுக்கல் சரஸ்வதியின் கோயில் பிரார்த்தனை வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் முடிவில், 543 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன..

பாஜகவின் ஆட்சி: இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலுள்ள பாஜக தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணி கட்சிகளின் தயவால் 3வது முறையாக ஆட்சியை அமைக்கவுள்ளது.
சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA - என்.டி.ஏ.) தலைவராக பிரதமர் மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, பிரதமர் மோடிக்கு 75க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதைத்தவிர, இந்தியா முழுவதுள்ள அரசியல் கட்சி பிரமுகர்களும் வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.
முன்னதாக மோடி மீண்டும் 3 வது முறையாக பிரதமராக வேண்டும் என்று ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும், விசுவாசிகளும் பல்வேறு கோயில்களில் பிரார்த்தனை செய்திருந்தனர்.

திருவண்ணாமலை: அந்தவகையில், மாநில தலைவர் அண்ணாமலையும், திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று வேண்டிக் கொண்டிருந்தார். 3வது முறையாக பிரதமராக ஆட்சியில் அமர, அருணாசலேஸ்வரரிடம் வேண்டுதல் வைக்கப்பட்டது என்றும் இதனை சிவபெருமான் நிறைவேற்றி கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அண்ணாமலை அபபோது நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தார்.
இதுபோலவே, பாஜக சஷ்டிசேனா அமைப்பின் தலைவர் பெண் நிர்வாகி சரஸ்வதி என்பவரும் பழனியில் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.. அதுமட்டுமல்லாமல், கடந்த மாதம் 28-ந்தேதி பழனி திருஆவினன்குடி கோவிலில் பக்தர்களிடம் மடிப்பிச்சை ஏந்தி யாசகமும் பெற்றார் சரஸ்வதி..
அண்ணாமலை போட்டோ: கோவில் வாசலில், அண்ணாமலை போட்டோவுடன் உட்கார்ந்து கொண்ட சரஸ்வதி, கோயிலுக்குள் வந்து செல்வோரிடம் யாசகம் பெற்றார்.. பிறகு அந்த காணிக்கை பொருட்களை பழனி கோவில் உண்டியலிலேயே செலுத்தி வழிபட்டார்.
இதற்கு பிறகு செய்தியாளர்களிடமும் சரஸ்வதி பேசியிருந்தார்.. அப்போது, "மீண்டும் 3வது முறையாக மோடி பிரதமராக வேண்டும், கோவையில் அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் என பழனி முருகனிடம் வேண்டுதல் வைத்து அதனை இன்று நிறைவேற்றினேன்... தேர்தலில் மோடி வெற்றிபெற்று 3வது முறையாக பதவியேற்கும் நாளில் மறுபடியும் முருகனிடம் என்னுடைய காணிக்கையை வழங்குவேன்" என்று கூறியிருந்தார்.
பழனி சரஸ்வதி: இந்நிலையில், மோடி 3-வது முறையாக மீண்டும் பிரதமர் ஆகிறார். இதனை பாஜகவினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகிறார்கள்... இப்படிப்பட்ட சூழலில், சஷ்டிசேனா அமைப்பின் தலைவர் சரஸ்வதி மீண்டும் பழனிக்கு நேற்று வந்தார்.
3-வது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்க இருப்பதையொட்டி அவர், பழனி முருகன் கோவிலில் முடிக்காணிக்கை செலுத்த உள்ளதாக சொன்னார்.. பிறகு, மோடியின் உருவப்படம் கொண்ட முகமூடியை முகத்தில் அணிந்துகொண்டு கோயிலுக்குள் நுழைந்தார்.. சரவணப்பொய்கை முடிக்காணிக்கை நிலையத்திற்கு சென்று பூமுடி செலுத்தினார்... இதனையெல்லாம் கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் வியப்புடன் பார்த்தபடி நின்றனர்.
மீண்டும் பரபரப்பு: சஷ்டிசேனா அமைப்பின் தலைவர் சரஸ்வதி, ஏற்கனவே பழனி கோவிலுக்கு வந்து 3-வது முறையாக மோடி பிரதமராக வேண்டும் என்று மடிப்பிச்சை ஏந்தி வழிபட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று மோடிக்காக தலைமுடியை காணிக்கை செலுத்தி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications