ஐ.பெரியசாமி வீட்டில் ஈடி ரெய்டு..முக்குலத்தோரை குறிவைத்த அதிமுக-பாஜக? திண்டுக்கல்லில் திடீர் போஸ்டர்
திண்டுக்கல்: திமுக துணை பொது செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ பெரியசாமிக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த நிலையில் முக்குலத்தோரை குறி வைத்து வேட்டையாடும் நோக்கில் ஐ பெரியசாமியின் வீட்டில் அமலாக்கத் துறையை ஏவியதாக அதிமுக பாஜக கூட்டணிக்கு கண்டனம் தெரிவித்து தேவர் பேரவை சார்பில் திண்டுக்கல்லில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திமுக அமைச்சர்களில் தென் மாவட்டங்களில் மிக முக்கியமானவர் ஐ.பெரியசாமி. தற்போது திமுக துணை பொது செயலாளராகவும், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சராகவும் இருக்கிறார். ஆரம்பத்தில் வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளராக இருந்தவரை மாவட்ட அரசியலில் கூட அவ்வளவாக அவரை தெரியாது.
1970 காலகட்டத்தில் நடந்த திண்டுக்கல் இடைத்தேர்தலின் போது எம்ஜிஆர் வத்தலக்குண்டுக்குள் அனுமதிக்க மாட்டேன் என தொண்டர்களுடன் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியவர். அதனால் அவரை அடையாளம் கண்ட கலைஞரால், மாவட்ட செயலாளராகவும், தொடர்ந்து அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

ஐ.பெரியசாமி
கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஐ பெரியசாமியின் வீடு, அவரது மகனும் பழனி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஐபி செந்தில்குமார் வீடு, மகள் இந்திராவின் வீடு மற்றும் நூற்பாலைகளில் அதிரடி சோதனை நடைபெற்றது. 11 மணி நேரத்திற்கு மேலாக ஐ.பெரியசாமியின் வீட்டிலும், 15 மணி நேரம் ஐபி செந்தில்குமார் வீட்டிலும், 17 மணிநேரம் இந்திராணியின் வீட்டிலும் சோதனை நடந்தது.
அமலாக்கத்துறை
இந்த சோதனையில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் நகை, பணம், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறித்த முழு விவரத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை. சட்டவிராத பண பரிமாற்ற வழக்கு மற்றும் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் எந்த வழக்கின் அடிப்படையில் சோதனை நடைபெற்றது என்பதை இதுவரை அமலாக்கத்துறை அறிவிக்கவில்லை. அது தொடர்பான அறிக்கை இன்னும் சில தினங்களுக்குள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாதி அரசியல்
இதற்கிடையே அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்ததாக திமுக கூறியிருக்கிறது. மேலும் இதுபோன்ற சோதனைகளுக்கு அஞ்ச மாட்டோம் என அறிக்கை வெளியிட்டிருக்கிறார். திமுக அமைப்பு செயலாளர் ஆன ஆர்எஸ் பாரதி. இது ஒரு புறம் இருக்க ஒரு நாள் முழுவதும் வீட்டை விட்டு வெளியே வர கூட அனுமதிக்காமல் அமலாக்கத்துறை பெரியசாமியை டார்ச்சர் செய்ததாக புகார் சொல்லுகின்றனர் திமுகவினர்.
தேவர் பேரவை
இந்த நிலையில் அமைச்சர் சாமிக்கு ஆதரவாக சமுதாய அமைப்புகளும் களமிறங்கி இருக்கின்றன. இந்த நிலையில் ஐ.பெரியசாமி முக்குலத்தோர் என்பதால் சாதி ரீதியாக அவரை குறிவைத்து சோதனை நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டுகின்றனர் தேவரின அமைப்புகள். இந்த நிலையில் அமைச்சராக பெரியசாமிக்கு ஆதரவாக திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேவர் பேரவை சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. முக்குலத்தோர் சமுதாயத்தை குறிவைத்து பழிவாங்கும் இடத்தில் ஐ.பெரியசாமியின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாகவும், சோதனையை ஏவிய அதிமுக பாஜக கூட்டணியை கடுமையாக கண்டிப்பதாக தேவர் பேரவை சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
புதுச்சேரியில் மார்ட்டின் மகனால் தெறித்து ஓடும் பாஜக? ரங்கசாமி போட்ட சைலண்ட் ஸ்கெட்ச்.. அப்போ விஜய் -
2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி! -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை! ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகை! கேரளாவில் NDA சொதப்பல் -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்! -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக












Click it and Unblock the Notifications