செம ட்விஸ்ட்.. மோடியை வரவேற்க.. ஒன்றாக நின்ற எடப்பாடி - ஓபிஎஸ்.. மதுரை ஏர்போர்ட்டில் நடந்தது என்ன?
திண்டுக்கல்: மதுரையில் பிரதமர் மோடியை இன்று ஏர்போர்ட்டில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.
பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ளார். திண்டுக்கல் காந்தி கிராமம், காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பிரதமர் மோடியுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கின்றனர்.
பெங்களூரில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்த அவர் ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல்லுக்கு செல்கிறார்.

மோடி
இந்த நிலையில் பிரதமர் மோடியை இன்று வரவேற்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையம் சென்றார். இதற்காக எடப்பாடி பழனிசாமி முன்பே நேரம் கேட்டு இருந்தார். அதன்படியே அவருக்கு நேரம் கொடுக்கப்பட்டது. இதற்காக சேலத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி இன்று காலையே மதுரைக்கு சென்றார். மதுரை விமான நிலையத்தில் பிற்பகலில் இருந்தே எடப்பாடி காத்துகொண்டு இருந்தார்.

எடப்பாடி பழனிசாமி
இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வமும் மோடியை வரவேற்க நேரம் கேட்டு இருந்தார். அவருக்கு நேரம் கொடுக்கப்படவில்லை என்று தொடக்கத்தில் தகவல்கள் வந்தன. மோடியை சந்திக்க வேண்டும் என்றும் நேரம் கேட்டு இருந்தார். இந்த நிலையில் மோடியை வரவேற்க ஓ பன்னீர்செல்வத்திற்கும் கடைசியில் நேரம் கொடுக்கப்பட்டது. இதனால் அவரும் மதுரை விமான நிலையத்திற்கு வந்தார்.

ஓ பன்னீர்செல்வம்
இரண்டு பேருமே ஒன்றாக இன்று விமான நிலையத்தில் இருந்தனர் . ஆனால் அருகருகே நிற்காமல் கொஞ்சம் தள்ளி இருந்தனர். இடையில் சில அதிகாரிகள் இருந்தனர். இரண்டு பேருமே ஒன்றாக மோடியை வரவேற்றனர். இவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளவில்லை. முகத்திற்கு முகம் பார்த்துக்கொள்ளவில்லை.

இரண்டு பேர்
இரண்டு பேரும் பேசும் சூழ்நிலைகள் ஏற்படவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் மாலை வரை விமான நிலையத்திலேயே இருப்பார்கள். மோடி செல்லும் வரை அவரை வழியனுப்ப இவர்கள் உள்ளேயே இருப்பார்கள்.மோடி திரும்பி செல்லும் போது அவரை வழியனுப்பார்கள். இரண்டு பேருமே மோடியை தனியாக சந்திக்க நேரம் கேட்டனர். ஆனால் இவர்களுக்கு தனியாக சந்திக்க நேரம் கொடுக்கப்படவில்லை.
-
விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன் -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications