அத்தனையும் பதவி வெறி.. இருந்தா வாங்க.. இல்லாட்டி விடுங்க..இவரெல்லாம் ஒரு தலைவரா?.. தகித்த இபிஎஸ்
பழனி: பதவி வெறி பிடித்து கட்சி அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பத்திரங்களை எல்லாம் திருடியவர் ஒரு தலைவரா என ஓபிஎஸ் பெயரை குறிப்பிடாமல் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அதிமுகவின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில் மக்களைப் பற்றியும் மாணவர்களைப் பற்றியும் இந்த ஆட்சிக்கு கவலையில்லை.
ஸ்டாலினின் அரசு குழு அரசு. இதுவரை 37 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றால் எந்த பயனாவது இருக்கிறதா? ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது. இந்தியாவில் ஜனநாயகம் முறைப்படி நடைபெறக் கூடிய ஒரே கட்சி அதிமுகதான்.

பதவி சுகம்
நம் இயக்கத்திலிருந்து பல பதவி சுகத்தை அனுபவித்தவர் பதவி வெறியின் காரணமாக அத்துமீறி தலைமை அலுவலகத்தில் நுழைந்தார். இந்த தலைமை கழகம் எனக்கோ இந்த மேடையில் இருப்பவர்களுக்கோ ஓபிஎஸ்ஸுக்கோ சொந்தமானது அல்ல. தொண்டர்களாகிய உங்களுக்குத்தான் சொந்தம். பதவியிலிருந்தால் அந்த அலுவலகத்தில் போய் அமர்ந்து பணி செய்யலாம்.

அதிமுக தலைமை கழகம்
அதுதான் எங்களுக்கு கிடைத்த வாய்ப்பு. அதிமுக தலைமை கழகம் நமக்கெல்லாம் கோயில் மாதிரி. அந்த கோயிலின் பெயரை அண்மையில்தான் எம்ஜிஆர் மாளிகை என பெயர் வைத்தோம். ஆனால் அந்த எம்ஜிஆர் மாளிகை என்ற போர்டை கூட அரக்க குணம் படைத்தவர்கள் உடைத்துவிட்டார்கள்.

அறையின் கதவுகள்
அம்மா என அழைத்தோமே அந்த அறையின் கதவுகளை காலால் எட்டி உதைத்து யார் எப்போது கட்சியில் சேர்ந்தார்கள் என்பதற்கான ஆதாரங்களை எல்லாம் தீ வைத்து கொளுத்திவிட்டார்கள். அந்த இடமே பார்ப்பதற்கு போர்க் களம் போல் காணப்படுகிறது. நீங்கள் அதிமுக அலுவலகத்தை காலால் உதைப்பதை பார்க்கும் போது ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களையும் எட்டி உதைத்துவிட்டதாகவே பார்க்கப்படுகிறது.

தொண்டர்கள் நெஞ்சில் உதைத்தனரே
ஒவ்வொரு தொண்டனின் நெஞ்சிலும் உதைத்ததாகவே பார்க்கிறோம். ஏனென்றால் நாட்டுக்காக உழைத்த தலைவன் உருவாக்கிய கட்டடம் அது. அப்படிப்பட்ட கட்டடத்தை உடைத்து தள்ளிவிட்டு பொருட்களை எல்லாம் தூக்கி போட்டுவிட்டு செல்பவர் எல்லாம் ஒரு தலைவரா? கட்சி அலுவலகத்தின் பத்திரங்களை எல்லாம் திருடிக் கொண்டு சென்றுவிட்டார்கள் என கடுமையாக விமர்சித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
-
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!











Click it and Unblock the Notifications