பட்டையக் கிளப்புது தமிழக அரசு.. மாதம் அக்கவுண்டுக்கு வரும் ரூ.7,000! இதை மட்டும் செய்தாலே போதுமே!
திண்டுக்கல்: தமிழக அரசின் சார்பில் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் மூலம் மாதாந்திர உதவித் தொகை, இலவச பேருந்து பயணம், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட உதவிகள் அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
அது மட்டும் அல்லாமல் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி கல்லூரி படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில்," திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி மற்றும் கல்லூரியில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு மாற்றத்திறனாளிகள் நலத்துறையின் மூலம். 1-ம் வகுப்பு முதல் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இம்மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி, கல்லூரிகளில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் 2025-2026-ஆம் நிதியாண்டுக்கு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற்று பயனடைவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், மாணவ, மாணவியரின் வங்கி கணக்குப் புத்தக நகல், ஆதார் அட்டை நகல், UDID அட்டை நகல், தடையில்லா சான்று ஆகியவற்றுடனும். மேலும், 9ம் வகுப்பு முதல் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் கூடுதலாக முந்தைய வகுப்பில் பெற்ற மதிப்பெண் சான்று (40 சதவீதத்திற்கும் குறையாமல் இருத்தல் வேண்டும்) ஆகியவற்றுடன் கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தில் பள்ளி தலைமையாசிரியர் கையொப்பம், கல்லூரி முதல்வர் கையொப்பத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.
9-ம் வகுப்பு முதல் கல்லூரிகளில் கல்வி பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பயன் பெறுவதற்கு மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் தேசிய அடையாள அட்டை நகல், UDID அட்டை நகல் 1. குடும்ப அட்டை நகல், மாணவ, மாணவிகள் வங்கி கணக்குப் புத்தக நகல் 1. பிற துறைகளில் வகுப்பு வாரியான கல்வி உதவித்தொகைக்கு பள்ளி மற்றும் கல்லூரி வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறவில்லை என்பதற்கான பள்ளி மற்றும் கல்லூரி முதல்வரின் தடையில்லா சான்றுடன். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 22.07.2025-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு. மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண்(0451-2460099) வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்" என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, வழங்கப்படும் வகுப்பைப் பொறுத்து மாறுபடும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ரூ.2,000, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை ரூ.6,000, ஒன்பது முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ரூ.4,000, இளங்கலை பட்டம் ரூ.6,000 மற்றும் முதுகலை பட்டம் ரூ.7,000 வரை வழங்கப்படுகிறது. மேலும், ஆராய்ச்சிப் படிப்புகளில் சேரும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
முதலாளியாக சூப்பர் சான்ஸ்.. 1.50 கோடி வரை மானியம்! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு! எப்படி பெறுவது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications