திண்டுக்கல் ரத்தினத்தை விடாது விரட்டும் அமலாக்கத்துறை.. இன்றும் ரெய்டு.. பின்னணி என்ன?
திண்டுக்கல்: தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் மீண்டும் இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். ரத்தினமும், அவரது மகன்களும் வீட்டில் இல்லாத நிலையில் அவரது மனைவியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் வசித்து வருபவர் ரத்தினம். இவர் திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டையில் கல்லூரிகளை வைத்து நடத்தி வருகிறார். மேலும் ரியல் எஸ்டேட், மணல் குவாரிகள் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார். இவரது வீட்டின் அருகிலேயே தரணி குழும அலுவலகமும் உள்ளது. இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

ரத்தினம் வீடு, அலுவலகம் மற்றும் அவரது உதவியாளரான கோவிந்தன் ஆகியோரது வீடுகளிலும் இந்த சோதனை நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த நிலையில் இன்றைய தினம் காலையில் 2 கார்களில் வந்த 4 பேர் கொண்ட அதிகாரிகள் வீட்டிற்குள் சென்று ரத்தினம் உள்ளாரா? என்று கேட்டனர். அவர் நேற்று இரவே வெளியூர் சென்று விட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து 2-ம் கட்ட சோதனையை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அமாலக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதை முன்னிட்டு துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை போலீசார் அவரது வீட்டின் முன்பு காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மணல்குவாரி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அடுத்தடுத்து சோதனை நடத்தி வருகின்றனர். நீர்வளத்துறை அதிகாரியிடம் இரண்டு நாட்கள் விசாரணை மேற்கொண்டனர். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களில் இந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். அதன் தொடர்ச்சியாகவே மீண்டும் அமலாக்கத்துறை சோதனை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார் திண்டுக்கல் ரத்தினம்.
சாதாரண சர்வேயராக வலம் வந்தவர் இவர். சைக்கிள்தான் இவரது வாகனம். இன்று இவரிடம் குவிந்து கிடக்கும் சொத்துக்களுக்கும், ஆஸ்தி பாஸ்திகளுக்கும் குறைவே இல்லை. எல்லாம் மணலால் வந்த சொத்துக்கள் என்கின்றனர். முத்துப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தினம். மனைவி, 2 மகன்களுடன் திண்டுக்கல்லில் வசித்து வருகிறார். புகழ் பெற்ற ஜிடிஎன் கல்லூரியின் அதிபர்.
ஆரம்பத்தில் இவர் நில அளவைத் துறையில் சர்வேயராக இருந்து வந்தார். 1980ம் ஆண்டு இடமாறுதலில் திண்டுக்கல் வந்து சேர்ந்தார். வந்த இடத்தில் இவருக்கு அரசியல்வாதிகளின் தொடர்பு கிடைத்தது. அவர்களின் ஆலோசனைப்படி அரசு வேலையை விட்டு விட்டு ரியல் எஸ்டேட்டில் குதித்தார். அதில் லாபம் கிடைக்கவே அப்படியே தொழிலை விரிவாக்கி, செங்கல் சூளை, ஜல்லி ஆலை என விரிவடைந்தார்.
அப்போதுதான் இவருக்கு மணல் குவாரி தொழிலில் பரிச்சயம் ஏற்பட்டது. அதற்குப் பிறகுதான் இவர் மிகப் பெரிய கோடீஸ்வரர் ஆனாராம். புதுக்கோட்டை ராமச்சந்திரனுடனும், சிவகங்கை படிக்காசு என்பவருடனும் ஏற்பட்ட தொடர்புகள் இவரை எங்கேயோ கொண்டு போய் விட்டன. கூட்டாளிகளுடன் பங்கு போட்டு மணலை வைத்து பணத்தை அள்ள ஆரம்பித்தார்.
ரத்தினத்திற்குச் சொத்துக்களுக்குப் பஞ்சமே இல்லை. பிரமாண்டமான திண்டுக்கல் ரத்தினம் விலாஸ் இவரது ஹோட்டல்தான். சென்னையிலும் வீடுகள் உள்ளன. தரணி குழுமம் என்பது இவரது ரியல் எஸ்டேட் நிறுவனமாகும். மிகக் குறுகிய காலத்தில் மிகப் பெரிய கோடீஸ்வரராக உயர்ந்தவர்களில் ரத்தினத்திற்கும் முக்கிய இடம் உண்டு. எல்லாம் மணல் குவாரி தொழிலில் கிடைத்த கொள்ளை லாபம்தான் என்கின்றனர். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் திண்டுக்கல்லில் பறப்பது என்னவோ இவர் கொடிதான் என்கின்றனர்.
-
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது!












Click it and Unblock the Notifications