விடாத அமலாக்கத்துறை.. திமுக நிர்வாகியின் உறவினருக்கு சொந்தமான இடங்களில் சோதனை!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக ஒன்றிய செயலாளர் வீடு, தோட்டத்து பங்களாவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்திய நிலையில், இன்று நாமக்கலில் அவரது உறவினருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளராக வீரா எஸ்.டி சாமிநாதன் உள்ளார். இவருக்கு சொந்தமாக பழனி அருகே உள்ள புஷ்பத்தூரில் சிபிஎஸ்இ பள்ளியையும் நடத்தி வருகிறார். இதுமட்டும் இன்றி வேடசந்தூர், சென்னை உள்பட பல்வேறு இடங்களில் இவருக்கு சொந்தமான நிதிநிறுவனங்களும் உள்ளன. இவருக்கு சொந்தமாக கல்லூரியும் உள்ளது. இவர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது.

இவர் டாஸ்மாக் பார் நடத்துவதற்காக அனுமதி வழங்க 25 மாவட்டங்களில் பணத்தை வசூலித்து கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான புகாரின் பேரில் சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கு பதிவு செய்த அமலாக்கத் துறை நேற்றைய தினம் சாமிநாதன் வீட்டில் சோதனை நடத்தியது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு கொங்கு நகரில் உள்ள வீடு, தமுத்துபட்டியில் உள்ள அவரது தோட்ட பங்களாவிலும் இரு குழுக்களாக அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
நேற்று மாலை 6.20 மணி வரை அமலாக்கத்துறையின் இந்த சோதனை நடைபெற்றது. சோதனையில் கைப்பற்றிய ஆவணங்கள் பற்றிய எந்த விவரத்தையும் அமலாக்கத்துறையினர் தெரிவிக்க மறுத்து விட்டனர். செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் என்று சொல்லப்படும் சாமிநாதனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனை திமுகவினர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், வேடசந்தூர் சாமிநாதன் உறவினரான காளியப்பன் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உள்ள காளியப்பன் வீடு உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை அதிகாரிகள் 12 பேர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று நடைபெற்ற சோதனையின் தொடர்ச்சியாக அவரது உறவினரான டயர் மணி என்ற காளியப்பன் வீட்டிலும் இந்த சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் கடந்த ஜூன் மாதம் சோதனை செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்றக் காவலில் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருக்கிறார். அவரது கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை ஒரு பக்கம் தொடர்ந்து நடக்கும் நிலையில், மறுபுறம் பல பரபர சம்பவங்கள் நடந்து வருகிறது.
நேற்று வேடசந்தூரில் சோதனை நடைபெற்ற நிலையில், இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கரூரில் உள்ள சங்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். உதவியாளர் சங்கர் வீடு உட்பட பல்வேறு இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடைபெற்றது. சங்கர் வீட்டில் இல்லதாதால் அவரது வீட்டின் உரிமையாளர் நேமநாதன் முன்னிலையில் பூட்டை உடைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். காலை முதல் பல மணி நேரம் இந்த சோதனை நடைபெற்ற நிலையில் சோதனை மாலையில் நிறைவடைந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications