இது லிஸ்ட்லயே இல்லையே.. தேர்தல் களத்தில் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி தம்பதி! பாட்டுபாடி வாக்கு கேட்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் சுயேச்சை வேட்பாளரை ஆதரித்து திரைப்பட பின்னணி பாடகர்களான செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி தம்பதி பாடல்கள் பாடி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
Recommended Video
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ல் நடைபெற உள்ளது. சென்னை, கோவை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 90 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

பிரச்சாரம்
இதற்காக தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்தனர். இவர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கட்சி வேட்பாளர்களுக்கு அந்தந்த கட்சி தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். திரைப்பட நடிகர், நடிகைகளும் பிரசாரங்களில் களம் இறங்கியுள்ளனர்.

பின்னணி பாடகர்கள்
திண்டுக்கல் மாநகராட்சியிலும் வேட்பாளர்கள் சுறுசுறுப்பாக தேர்தல் பணியை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத்தினர், உறவினர்கள், கட்சி பிரமுகர்களுடன் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாநகராட்சி 2வது வார்டில் சந்தோஷ் முத்து என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

தென்னை மரம்
தென்னை மரம் சின்னமாக ஒதுக்கப்பட்டள்ளது. இவர் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இதன் தொடர்ச்சியாக நாட்டுப்புற பாடல்களில் பிரபலமாகி திரைப்பட பின்னணி பாடகர்களாக மாறியுள்ள செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி தம்பதியை அழைத்து வந்து பிரசாரத்தில் ஈடுபடுத்தினார்.

பாடல்கள் பாடி ஓட்டு சேகரிப்பு
சந்தோஷ் முத்துவுக்கு ஆதரவாக தென்னை மர சின்னத்திற்கு பாடல் பாடி செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி தம்பதி வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். இவர்களுடன் தென்னை மர சின்னத்தை கையில் ஏந்தி ஏராளமானவர்கள் சென்றனர். இந்த சமயத்தில் பொதுமக்கள் கேட்டு கொண்டதன் அடிப்படையில் இருவரும் திரைப்பட பாடல்கள் பாடியும் மகிழ்வித்தனர்.












Click it and Unblock the Notifications