ஆள் அம்பு சேனை இல்லை! தோட்டத்தில் மாட்டுவண்டி பூட்டி ஓட்டிய அமைச்சர் சக்கரபாணி! அப்படியொரு சந்தோஷம்!
திண்டுக்கல்: ஆட்சிப்பணி, கட்சிப்பணி என எப்போதும் பரபரப்பாகவே ஓடிக்கொண்டிருக்கும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, நீண்ட நாட்களுக்கு பிறகு தனது தோட்டத்திற்கு சென்று பழைய சக்கரபாணியாக மாறி மகிழ்ச்சி கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தயம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சக்கரபாணி. விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் தனது ஊரிலேயே சொந்தமாக பெட்ரோல் பங்க் ஒன்றும் நடத்தி வருகிறார். கடந்த கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக இவர் தான் ஒட்டன்சத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்.

என்ன ஆச்சரியமாக உள்ளதா, 1996ஆம் ஆண்டு தொடங்கி 2021 சட்டமன்றத் தேர்தல் வரை 6 முறை ஒரே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார் என்றால் அவரது செல்வாக்கை பற்றி சொல்லவே வேண்டியதில்லை. அந்தளவுக்கு ஒட்டன்சத்திரம் தொகுதியின் மூலை முடுக்குகளெல்லாம் அறிந்து வைத்திருக்கக் கூடியவர்.
ஊருக்கு 10 பேரை பேர் சொல்லி அழைக்கும் அளவுக்கு தொகுதி மக்களுடன் மாமன், மச்சானாக, அண்ணனாக பழகக்கூடியவர். சட்டமன்ற உறுப்பினராக இருந்தவரை அவ்வப்போது தனது தோட்டத்திற்கு சென்று வந்து கொண்டிருந்த சக்கரபாணிக்கு, அமைச்சராகிய பிறகு அந்த பக்கமே செல்ல முடிவதில்லை. காரணம் அந்தளவுக்கு அவருக்கு ஆட்சிப்பணியும், கட்சிப்பணியும் அதிகரித்திருப்பது.

இந்தச் சூழலில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தயம் தோட்டத்திற்கு நேற்று சென்ற அமைச்சர் சக்கரபாணி, ஆள் அம்பு சேனை என எதுவுமே இல்லாமல் மாட்டுவண்டியை பூட்டிக்கொண்டு சிறிது நேரம் அதனை ஓட்டி மகிழ்ந்தார். இதனால் கடந்த காலத்தின் மகிழ்வான பல நினைவுகளில் திழைத்து இருந்தேன் என அவரே தனது சமூகவலைதளப் பக்கங்களில் பதிவு வெளியிட்டுள்ளார்.
நெடுநாட்களுக்குப் பிறகு ஒட்டன்சத்திரத்தில் உள்ள எனது தோட்டத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மாடுகளோடும், கன்றுகளோடும் சில நேரத்தை கழித்து, வெகு நாட்களுக்குப் பிறகு மாட்டு வண்டியையும் ஓட்டி மகிழ்ந்தேன்.
— R.SAKKARAPANI (@r_sakkarapani) September 21, 2023
கடந்த காலத்தின் மகிழ்வான பல நினைவுகளுடன் சிறிது நேரம் திழைத்து இருந்தேன்,… pic.twitter.com/3yaMtDpiPy
பி.எஸ்.ஓ. இல்லை, போலீஸ் பந்தோபஸ்து இல்லை, அமைச்சருக்குரிய அரசு வாகனம் இல்லை. பழைய சக்கரபாணியாக மாறி மாட்டுவண்டி ஓட்டி மகிழ்ந்து கொண்டிருக்கும் போதே அவருக்கு கணக்கு வழக்கில்லாமல் செல்போன் அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. இதனால் மீண்டும் தனது பரபரப்பு வாழ்க்கையை தொடர ஆரம்பித்துவிட்டார்.












Click it and Unblock the Notifications