கொடைக்கானலை சுற்றி பார்த்துவிட்டு.. ரயில் முன் பாய்ந்து 4 பேர் தற்கொலை!
திண்டுக்கல்: விழுப்புரத்தில் 5 பேர் கொண்ட குடும்பம் தற்கொலை செய்த பதட்டம் தணியாத நிலையில் கொடைக்கானல் அருகே நான்கு பேர் கொண்ட குடும்பம் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு ரயில் நிலையத்திலிருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் மதுரையில் இருந்து திண்டுக்கல் மார்க்கமாக செல்லும் ரயில் தண்டவாளத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த கொடைரோடு ரயில்வே போலீசார் தண்டவாளத்தில் உடல் சிதறி கிடந்த இடத்தில் ஆய்வு செய்தனர். அங்கு சிதறிகிடந்த ஆதார் அட்டையில் இறந்தவர்கள் திருச்சி மாவட்டம் உரையூரைச் சேர்ந்த உத்தர பாரதி என்பதும், இவர் அப்பகுதியில் மருந்து கடை ஏஜென்சி எடுத்து நடத்தி வந்ததும் தெரியவந்தது. இவரது மனைவி சங்கீதா மற்றும் மகள் அபிநயா சரி பத்தாம் வகுப்பும், மகன் ஆகாஷ் ஏழாம் வகுப்பும் படித்து வந்துள்ளனர்.

மேலும் அவர்களில் ஒருவர் பாக்கெட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து கொடைரோடு ரயில் நிலையத்திற்கு எடுக்கப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் மற்றும் கொடைரோட்டிலிருந்து கொடைக்கானலுக்கு சென்ற பஸ் டிக்கெட்டுகளும் இருந்தன. இதனை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடன் பிரச்சினையால் இவர்கள் நான்கு பேரும் தற்கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications