அசத்துதே அரசு! மாதம் 1000.. நீங்க படிச்சா மட்டும் போதும்! வயது வரம்பு இல்லை..மகளிருக்கு செம சான்ஸ்
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கை 19.06.2025 முதல் நடைபெறவுள்ளது எனவும், பயிற்சியில் சேரும் மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகம், சீருடை, மிதிவண்டி, வரைபடக்கருவிகள் மற்றும் காலணிகள், இலவச பயண அட்டை, மத்திய அரசின் NCVT சான்றிதழ் வழங்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் கூறியுள்ளார்
தமிழ்நாடு அரசின் கீழ் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு பாடப்பிரிவுகளில் தொழிற் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதே போல மகளிர்க்கும் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையம் மூலம் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
மாதம் தோறும் 1000 ரூபாய் உதவித்தொகையுடன் இந்த பயிற்சிகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் திண்டுக்கல் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கை 19.06.2025 முதல் நடைபெறவுள்ளது என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," திண்டுக்கல் மாவட்டம், நத்தம்ரோடு, குள்ளனம்பட்டியில் இயங்கி வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்(மகளிர்) 2025 ஆம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கை 19.06.2025 முதல் நடைபெறவுள்ளது. இந்நிலையத்தில் சேர விரும்புவோர் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் நேரடியாக இந்நிலையத்திற்கு வருகைபுரிந்து சேர்ந்துபயன்பெறலாம் அல்லது இந்நிலைய முதல்வரை நேரில் தொடர்புகொண்டும் மற்றும் தொலைபேசி இணைப்பு எண். 9499055764 என்ற எண்ணில் தொடர்புகொண்டும் சேர்க்கை குறித்த விபரம் அறிந்துகொள்ளலாம்.
திண்டுக்கல் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கற்பிக்கப்படும் தொழிற்பிரிவுகள், படிப்பு காலம் மற்றும் கல்வித்தகுதி விவரம் வருமாறு:-Information Communication Technology System Maintenance (NSQF) தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் சாதனங்கள் பராமரிப்பு, Technician Power Electronics System (NSQF) -திறன் மின்னணுவியல் தொழில்நுட்பவியலாளர் ஆகிய இரண்டு ஆண்டுகள் படிப்பல் சேர எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Computer Operator and Programming Assistant (NSQF)-கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் மற்றும் புரோக்கராமிங் அசிஸ்டண்ட், Desktop Publishing Operator (NSQF)- டெஸ்க்டாப் பப்ளிசிங் ஆப்ரேட்டர், Fashion Design & Technology (NSQF)- நவீன ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பம் ஆகிய ஓராண்டு படிப்புகளில் சேர எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Surface Ornamentation Techniques (Embroidery) NSQF- அலங்கார பூத்தையல் தொழில்நுட்பம், Sewing Technology (NSQF)- தையல் தொழில்நுட்பம் ஆகிய ஓராண்டு படிப்பில் சேர 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவிகளுக்கு, மாதந்தோறும் உதவித்தொகை ரூ.750 வழங்கப்படும். புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும். பயிற்சியில் சேர மகளிருக்கு உச்சக்கட்ட வயது வரம்பு இல்லை. விலையில்லா பாடப்புத்தகம், சீருடை, மிதிவண்டி, வரைபடக்கருவிகள் மற்றும் காலணிகள், இலவச பயண அட்டை, மத்திய அரசின் NCVT சான்றிதழ் வழங்கப்படும், என மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்" என கூறப்பட்டுள்ளது.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications