திண்டுக்கல்லு திண்டுக்கல்லு.. 1 ஆடு இம்புட்டா? ரூ.6500க்கு மாட்டு வண்டியில் ஏறிய செம்மறி ஆடு.. ஹேப்பி
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டமே பிஸியாக உள்ளது.. இன்று ஆடி மாதம் வெள்ளிக்கிழமை என்பதால், திண்டுக்கல் உட்பட தமிழகத்தின் கால்நடை சந்தைகள் களைகட்டிவிட்டன.
தமிழ் மாதமான ஆடியில் அம்மனுக்கு கூழ்வார்த்தல், நேர்த்திகடன் செலுத்தும் வகையில் ஆடு, கோழிகளை பலி கொடுப்பதையும், கோயில்களுக்கு நேர்ந்துவிடுவதையும் தமிழக பக்தர்கள் வாடிக்கையாகவே வைத்திருக்கிறார்கள். அதனால், இந்த மாதத்தில் ஆடு மற்றும் கோழிகளின் விலை பல ஆயிரம் ரூபாய்களை கூடுதலாக வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சில பக்தர்கள் ஆடு மற்றும் கோழிகளை வாங்க அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு படையெடுத்துவிடுகிறார்கள்.. இதற்கு காரணம், பக்கத்து மாநிலங்களில் விலை குறைவாக இருப்பதுடன், கால்நடைகள் நோய் இல்லாமல் இருக்குமாம்..
திருவிழாக்கள்: அந்தவகையில், தமிழகத்தின் பல்வேறு கால்நடை சந்தைகள் இந்த மாதம் பிஸியாகவே காணப்பட்டு வருகின்றன.. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் உட்பட தென் மண்டலங்களிலுள்ள புகழ்பெற்ற அம்மன் கோயில்களில் ஆடி மாத விழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இதனால், நேர்த்திக்கடனுக்காக, பக்தர்கள் சிலர் முன்கூட்டியே ஆடு, கோழிகளுக்கு டோக்கன் அட்வான்ஸ் கொடுத்து வைத்திருந்தனர்..
திருவிழா காலங்களில் விலை அதிகரிக்கலாம் என்பதால் பக்தர்கள் அட்வான்ஸ் தந்து ஆடுகளை வாங்கினார்கள்.
ஆடிமாதம்: இன்று ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை என்பதால், ஆடு விற்பனை முன்கூட்டியே சூடுபிடித்துவிட்டது. அதிலும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே இருக்கும் அய்யலூர் ஆட்டு சந்தையானது, ஆடுகள் விற்பனைக்கு புகழ்பெற்றது. இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் நடைபெறும் இந்த சந்தையில் ஆடுகள் மட்டுமின்றி கோழிகளும் விற்பனையாகின்றன.
மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும், இந்த சந்தைக்கு வியாபாரிகள் வந்து, ஆடு, கோழிகளை மொத்தமாக வாங்கி செல்கிறார்கள்.. நிறைய பேர், இதற்காகவே வண்டியை எடுத்துக் கொண்டு ஆடுகளை அதில் ஏற்றிக் கொண்டு செல்வார்கள். இதனால், வார வாரம் அதிகாலையிலேயே வியாபாரிகள் இங்கு குவிந்துவிடுவார்கள்.

விடிகாலை: இன்று ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை என்பதால், கிராமப்புற கோவில்களில் கிடா வெட்டும் வைபவம் அதிகமாகவே இருக்கும். எனவே, நேற்று விடிகாலையிலேயே 3 மணிக்கு விவசாயிகளும், வியாபாரிகளும் அய்யலூர் சந்தையில் குவிந்துவிட்டனர்..
10 கிலோ வெள்ளாட்டு கிடா ரூ.11,000க்கும், செம்மறி ஆடுகள் ரூ.6500க்கும் விற்பனை செய்யப்பட்டது. ரூ.3 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் சொல்கிறார்கள்..
டிராபிக் ஜாம்: இப்படி ஆடுகளை விற்கவும், வியாபாரிகள் ஆடுகளை வாங்கவும் அய்யலூரில் திரண்டுவந்துவிட்டதால், திருச்சி-திண்டுக்கல் புறவழிச்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்து விட்டதாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications