நிலக்கோட்டை விஏஓவுக்கு நினைத்தே பார்க்காத இன்ப அதிர்ச்சி.. திண்டுக்கல்லில் நடந்த திருப்பம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் கிராம நிர்வாக அதிகாரி வீட்டில் 42 பவுன் தங்கம் கொள்ளையடித்த வழக்கில் வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த மணிசங்கர் என்ற இளைஞரை குற்றம் நடந்த வெறும் 3 நாட்களில் கண்டுபிடித்து கைது செய்ததுடன், நகைகளையும் போலீசார் மீட்டனர். இதையடுத்து கொள்ளை நடந்த 3 நாட்களில் குற்றவாளியைப் பிடித்த போலீசாரை அதிகாரிகள் பாராட்டினார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நாகம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்த முருகேசன் என்பவர் நிலக்கோட்டை அருகே சிவஞானபுரத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார்பணி நிமித்தமாக . கடந்த 16-ஆம் தேதி முருகேசன் திண்டுக்கல் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கும், அவரது மனைவி வள்ளிமயில் சொந்த வேலை காரணமாக திண்டுக்கல்லுக்கும் சென்றுவிட்டார்கள். இதையடுத்து விஏஓ முருகேசன் வீடு பூட்டிக்கிடந்துள்ளது.

கொள்ளை நடந்த விதம்
விஏஓ வீடு பூட்டிக்கிடப்பதை நோட்டமிட்ட மர்ம நபர், கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்திருக்கிறார். பீரோவை உடைத்து வைக்கப்பட்டிருந்த மோதிரம், தோடு, நெக்லஸ், சங்கிலி என மொத்தம் 42 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து உள்ளார். பின்னர் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றார். மாலையில் வீடு திரும்பிய வள்ளிமயில், கதவு திறந்து கிடப்பதை கண்டார். உள்ளே பீரோவை உடைத்து நகைகள் திருடியிருக்கிறார்கள் என்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
போலீஸ் நடவடிக்கை
இதையடுத்து வள்ளிமயில் திண்டுக்கல் மாவட்ட நிலக்கோட்டை போலீசில் நடந்த சம்பவங்களை விவரித்து புகார் அளித்தார். இதையடுத்து நிலக்கோட்டை போலீஸ் டிஎஸ்பி இளஞ்செழியன் தலைமையிலான போலீசாரும், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை நடத்தினர். குற்றவாளியைப் பிடிக்க குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. குற்றவாளியை அடையாளம் காண சுற்றி இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை எடுத்து போலீசார் சேகரித்தனர்.
கொள்ளையன் சிக்கினார்
இதனிடையே திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே திண்டுக்கல்-தேனி பைபாஸ் சாலையில் வாகன தணிக்கையின் போது, பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தார்கள். முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனர். தொடர்ந்து அவரைத் தீவிரமாக விசாரித்ததில், அவர் தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த மணிசங்கர் (வயது 24) என்பதும், அவர் நகைகளைக் கொள்ளையடித்ததும் தெரியவந்தது.
நகைகள் மீட்பு
அவரிடமிருந்து 42 பவுன் நகைகளும் மீட்கப்பட்டன. கொள்ளை நடந்த 3 நாட்களில் குற்றவாளியைப் பிடித்த போலீசாரை அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர். இன்றைய சூழலில் 42 பவுன் தங்கம் வாங்க சுமார் 50 லட்சம் வரை செலவாகும். போலீசார் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றி கொடுத்திருக்கிறார்கள். இதையடுத்து விஏஓ மற்றும் அவரது மனைவி ஆகியோர் நன்றி கூறினார்கள்.
-
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications