அன்னதானத்துக்கு எதுக்கு அனுமதி வாங்கனுங்குறேன்..சேகர்பாபு ஆன்டி இந்து! பழனியில் கொந்தளித்த எச்.ராஜா!
திண்டுக்கல்: பழனி தைப்பூசத் திருவிழாவிற்கு அன்னதானம் வழங்குவதற்கு அனுமதி வாங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவை நம்மை பிடித்த ஏழரை பாபு எனவும், அவர் ஒரு ஆன்டி இந்து எனவும் கடுமையாக விமர்சித்துள்ளது சர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா வருகை தந்தார். பாஜக மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் நகரத்தலைவர் ஆனந்தகுமார் உள்ளிட்டோர் ஹெச்.ராஜாவிற்கு வரவேற்பு அளித்தனர் .

தொடர்ந்து எச்.ராஜா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது," மதுரை மாவட்டத்தில் அரிட்டாபட்டியில் மக்களின் கோரிக்கையை ஏற்று டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்து அறிவிப்பு செய்துள்ளதற்கு பிரதமர் நரேந்திரமோடி, மத்திய அமைச்சர் கிஷன் குமார் ரெட்டி ஆகியோருக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வகிறேன்.
பழனியில் நடைபெறவுள்ள தைப்பூசத் திருவிழாவின்போது பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு பொதுமக்கள் அன்னதானம் வழங்குவதற்கு அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்து மத வழிபாட்டு உரிமையில் திமுக அரசு தொடர்ந்து விரோதமாக செயல்பட்டு வருகிறது. திமுக கட்சி மாநாடு நடைபெறும் போது தொண்டர்களுக்கு அளிக்கும் உணவு குறித்து அனுமதி பெற்று தான் மாநாடு நடத்துகிறீர்களா.
நம்மை பிடித்த ஏழரை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு. அவர் இந்துவே கிடையாது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்து கொண்டு அல்லேலுயா என்று கோஷமிட்ட போதே அவரது பதவியை பறித்திருக்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சகம் கிரிப்டோ கையில் மாட்டிக் கொண்டு சீரழிகிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது ஒரு இந்துவின் கடமை என்கிற அடிப்படையில் யாரிடமும் அனுமதி இன்றி அன்னதானம் வழங்குவோம்.
திருப்பரங்குன்றம் மலையில் 50 சென்ட் நிலமானது வக்பு வாரியத்திற்கு சொந்தம் என்று அறிவித்திருப்பது தவறு. 1931 ஆம் ஆண்டு ப்ரிவியூ கவுன்சிலில் தெரிவிக்கப்பட்டபடி திருப்பரங்குன்றம் கோவிலை முறையாக பாதுகாக்க வேண்டும். இது போன்ற மோசடிகளை தவிர்ப்பதற்காகவே வக்பு வாரிய திருத்தச் சட்டம் கொண்டு வந்துள்ளது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு. தமிழக ஹிந்து முஸ்லிம் மோதலை உருவாக்கும் வகையில் நடந்து கொள்ளும் மனிதநேய மக்கள் கட்சி என்பது மனிதநேயமே இல்லாத கட்சியாகும்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் வலிப்பு வந்தது போல் நடித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஞானசேகருக்கு ஆதரவாக காவல்துறையை சேர்ந்த 6பேர் செயல்பட்டுள்ளதாக புகார் எழுந்து உள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் காவல்துறையின் ஈரல் பகுதி அழுகிவிட்டது. தற்போது அவருடைய மகன் ஆட்சியில் முழுவதுமாக அழுகிவிட்டது.
-
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications