திண்டுக்கல்லில் லாரி டிரைவருக்கு உடம்பு பூராம் மூளை.. 'என்ன ஒரு புத்திசாலித்தனம்'.. இதை பாருங்க
திண்டுக்கல்: எந்த ஒரு விஷயத்தை பிளான் பண்ணாமா பண்ணினால் இப்படிதான் நடக்கும் .. ரயில்வே சுரங்கப்பாதை தடுப்பு கம்பியில் போய்விடலாம் என்று ஆர்வத்துடன் சென்ற டிரைவருக்கு பாதி தடுப்பு கம்பியை கடந்த பிறகுதான் தெரிந்திருக்கிறது. வண்டியின் பின் பகுதி சற்று தூக்கியிருக்கிறது என்பது. வசமாக சிக்கிக்கொண்ட லாரியை மீட்க நீண்ட நேரம் யோசித்த டிரைவர் எப்படி மீட்டார் என்பதை பார்ப்போம்.
தலையே போகும் பெரிய பிரச்சனைகளுக்கு கூட பொறுமையாக யோசித்து பார்த்தால் மாற்று வழிகள் நிச்சயம் இருக்கும். தீர்க்கவே முடியவில்லை என்று இருந்த பல பிரச்சனைகளுக்கு மாற்றி யோசித்தால் நம்ப முடியாத வகையில் தீர்வுகள் வந்துள்ளன. ஒரு முறை, வீட்டின் படிக்கெட்டில் குழந்தையின் தலை மாட்டிக்கொண்டது. குழந்தையை வெளியே எடுக்க பெற்றோர் எவ்வளவோ முயற்சித்தார்கள். ஆனால் குழந்தை உடலை வெளியே எடுக்க முடியவில்லை.. குழந்தையின் தாய் உடனே தீயணைப்பு அதிகாரிகளை அழைக்கிறார். தந்தையோ ரம்பத்தை எடுத்து அறுக்க ஓடி வருகிறார். குழந்தை உடனே சாமர்த்தியமாக யோசித்து, குழந்தை தலையைவிட்ட வழியாகவே வெளியே சென்றுவிட்டான்.

இதே போல் பல்லாவரத்தில் பல வருடமாக போக்குவரத்து நெரிசல் இருந்து வந்தது. இதற்கு தீர்வாக அங்குள்ள ஒரு வழி மேம்பாலத்தை, இருவழியாக மாற்றி வாகனங்களை செல்ல வைத்தார்கள். அதன்பிறகு போக்குவரத்து அங்கு கணிசமாக குறைந்துள்ளது. சின்னதாய் மாற்றி யோசித்தால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கிறது. அப்படித்தான் திண்டுக்கல்லில் டிரைவர் மாற்றி யோசித்து வாகனத்தை மீட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று திண்டுக்கல்லுக்கு நேற்று மாலை 4 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை திண்டிவனத்தை சேர்ந்த அமிர்தலிங்கம் ஓட்டி வந்தார். திண்டுக்கல் நகரில் பழைய கரூர் சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையை கன்டெய்னர் லாரி கடக்க முயன்றது. அப்போது சுரங்கப்பாதையின் முகப்பு பகுதியில் உள்ள தடுப்பு கம்பியில் அந்த லாரி சிக்கி நின்றது. இதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே சமயோசிதமாக டிரைவர் யோசித்து செயல்பட்டு, லாரியின் டயர்களில் இருந்து காற்றை இறக்கி விட்டார். இதையடுத்து கன்டெய்னர் லாரி தடுப்பு கம்பியில் இருந்து விடுபட்டது. பின்னர் லாரியை பின்னோக்கி நகர்த்திய டிரைவர், சாலையோரத்தில் நிறுத்தினார். அதன்பிறகு டயர் பஞ்சர் கடை ஊழியர்கள் மூலம் டயர்களில் மீண்டும் காற்றை நிரப்பி அங்கிருந்து லாரியை டிரைவர் எடுத்து சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக மாறியது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications