கர்நாடகா தேர்தல் களத்தில் ஆம் ஆத்மி தீவிரம்-நேற்று தேர்தல் அறிக்கை; இன்று 2-வது வேட்பாளர் பட்டியல்!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் களத்தில் ஆம் ஆத்மி கட்சி படுதீவிரமாக இறங்கி இருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கிறது. கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை ஆம் ஆத்மி நேற்று வெளியிட்ட நிலையில் இன்று 60 வேட்பாளர்களைக் கொண்ட 2-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் கொள்கைகளோடு மிக இணக்கமான கட்சி ஆம் ஆத்மி. வட இந்திய மாநிலங்களில் பாஜக, காங்கிரஸுக்கு சவால்விடும் வகையில் வளர்ந்து வருகிறது ஆம் ஆத்மி. டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்திலும் ஆட்சியைக் கைப்பற்றியது ஆம் ஆத்மி.

வட இந்திய மாநிலங்களைத் தொடர்ந்து தென்னிந்தியாவிலும் களமிறங்கி உள்ளது ஆம் ஆத்மி. கர்நாடகாவை குறிவைத்து படுதீவிரமான தேர்தல் பணிகளை ஆம் ஆத்மி கட்சி மேற்கொண்டு வருகிறது. கர்நாடகாவில் 224 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. இதில் முதல் கட்டமாக 80 வேட்பாளர்களைக் கொண்ட பட்டியலையும் அக்கட்சி வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியானது தமது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் 61 வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன. ஒரு வீட்டுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம், மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணம், ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய வாக்குறுதிகள் அதில் இடம்பெற்றிருந்தன.

தற்போது 60 வேட்பாளர்களைக் கொண்ட 2-வது வேட்பாளர் பட்டியலையும் ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. இன்று இந்த 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications