உடலை துண்டு துண்டா வெட்டி..கேம்ப் பயரில் குளிர் காய்ந்த கும்பல்! குலைநடுங்க வைத்த கொடைக்கானல் கிரைம்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: கொடைக்கானல் பெரும்பள்ளம் குருசடி மெத்து அருகே உள்ள தனியார் விடுதியில் அடையாளம் தெரியாத ஆண் உடல் எரிக்கப்பட்டு, தலை, மார்பு பகுதி மற்றும் எலும்பு துண்டுகள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கொலையானவரின் அடையாளம் தெரிய வந்துள்ள நிலையில், கொலையாளிகள் 4 பேரை மதுரையில் வைத்து போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெரும்பள்ளம் குருசடி மெத்து அருகே ஒருவரை எரித்து கொன்றதாக மதுரை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் மதுரை காவல் துறையினர் கொடைக்கானல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

Kodaikanal crime police

இதன் அடிப்படையில் இன்று கொடைக்கானல் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இப்போது ஒரு விடுதி வளகாத்தில் உள்ள கேம்ப் ஃபயர் போடப்பட்ட இடத்தில் சோதனை செய்யும் போது எலும்பு துண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் தனியார் விடுதி வளாகத்தை சுற்றி சோதனை செய்யும் போது எரிந்த நிலையில் ஆண் தலை மற்றும் மார்பு பகுதி மீட்கப்பட்டது. தொடர்ந்து மீட்கப்பட்ட உடல் பாகங்களை மீட்ட போலீசார், அவற்றை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், எரிந்து நபரின் முழு தகவல்களை காவல் துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த விடுதியின் உரிமையாளர் கடந்த 21ம் தேதி முதல் காணவில்லை என உறவினர்கள் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Kodaikanal crime police

மேலும் இந்த தங்கும் விடுதியின் உரிமையாளர் எரித்து கொலை செய்யப்பட்டிருக்காலம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் மதுரையில் காவல் துறையினரிடம் ஒருவரை எரித்து கொலை செய்ததாக தெரிவித்த நபரிடம் போலிசார் தொடர்ந்து விசாரித்தனர். அதில் பல அதிர்ச்சி தரும் தகவல் கிடைத்தது. அதில் கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் சிவராஜ் என்பதும், அவரை அவரது நண்பர்களே கொலை செய்து எரித்ததும் தெரிய வந்தது.

கொடைக்கானலில் உள்ள நாயுடுபுரம் பகுதியில் வசித்து வருபவர் சிவராஜ் வயது 60 தந்தை பெயர் சங்கர்
சிவராஜ் பல மாதங்களாக மது போதைக்கு அடிமையாக இருந்ததால் மதுரையில் உள்ள மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மீண்டும் தன்னுடைய சொந்த ஊர் கொடைக்கானலுக்கு வந்துள்ளார். இதற்கிடையே மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்ற போது சிவராஜிற்கும், உடன் சிகிச்சை பெற்ற மதுரை தத்தனேரியை சேர்ந்த மணிகண்டன், அருண், ஜோசப், சந்தோஷ், நாகசரத் ஆகியோருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.

Kodaikanal crime police

சிகிச்சை முடிந்து வெளியே வந்த பின்பும் அடிக்கடி சேர்ந்து மது குடித்து வந்ததாக தெரிகிறது. கடந்த மார்ச் 20ம் தேதி சிவராஜ் காட்டேஜில் 6 பேரும் சேர்ந்து அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளனர். அப்போது போதை தலைக்கேறிய சிவராஜ், மற்ற 5 பேரிடமும் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த 5 பேரும் சிவராஜை சரமாரியாக தாக்கியதுடன், மதுபாட்டிலை உடைத்து சரமாரியாக குத்தி உள்ளனர். இதில் படுகாயமடைந்த சிவராஜை அருகில் இருந்த கேம்பயரில் வைத்து டீசல் ஊற்றி எரித்துள்ளனர். பின்னர் பாதி எரிந்த நிலையில் இருந்த உடலை சுமார் 50 அடி பள்ளத்தில் தூக்கி எறிந்து விட்டு தப்பினர்.

சிவராஜ் மாயமானது குறித்து தங்கை கொடுத்த புகாரின்படி கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே மணிகண்டன் நேற்று சிகிச்சை பெற்ற மறுவாழ்வு மையத்திற்கு சென்று அங்குள்ள நிர்வாகியிடம் நடந்த சம்பவம் பற்றி கூறியுள்ளார். உடனே அந்த நிர்வாகி மதுரை போலீசில் புகார் செய்ததையடுத்து, போலீசார் மணிகண்டனை கைது செய்து கொடைக்கானல் போலீசிற்கு தகவல் தெரிவித்த நிலையில் இந்த கொலை சம்பவம் வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+