கொடைக்கானல் நிலம் மீண்டும் பிளந்தது! மலை கிராமத்தில் 200 அடி நிலப்பிளவு! என்ன நடக்குது கிளாவரையில்
திண்டுக்கல்: கொடைக்கானல் மலை கிராமங்களில் கடந்த ஆண்டு நிலப் பிளவு ஏற்பட்டு பெரும் பீதியை கிளப்பியிருந்த நிலையில், இப்போது மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளது.. கிளாவரை கிராமத்தில் 200 அடிக்கு நிலம் பிளந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலப்பிளவுக்கான காரணத்தை ஆராய வேண்டும் என்றும் மலைகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். என்ன நடந்தது கொடையில்?
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமங்கள் பல உள்ளன.. இதில் கடைசி கிராமமாக உள்ளதுதான் கிளாவரை..

கிளாவரையில் அதிர்ச்சி சம்பவம்
கடந்த வருடம் புது பிரச்சனை ஒன்று கிளாவரையில் ஏற்பட்டது.. கீழ் கிளாவரை பகுதிக்கு செருப்பனூத்து ஓடையில் இருந்து தண்ணீர் வருவது வழக்கமாக உள்ள நிலையில், கடந்த ஜூலை மாதம் திடீரென தண்ணீர் வராமல் போய்விட்டது.
இதனால் குழப்பமடைந்த கிராம மக்கள், செருப்பனூத்து ஓடை பகுதிக்கு செல்லும் வழியில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டுள்ளதா? என்று பார்த்தனர்.. அப்போதுதான், கிளாவரை பகுதியில் இருந்து வனப்பகுதி வழியாக செல்லும் வழியில் கூனிப்பட்டி வனப்பகுதியில் கிட்டத்தட்ட 300 அடி தூரத்துக்கு நிலத்தில் பிளவு ஏற்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றனர்.
கொடைக்கானல் மலைக்கிராமம்
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட நேரத்தின்போதுதான், இந்த நிலப்பிளவும் அப்போது ஏற்பட்டிருந்தது.. எனவே மலைக்கிராம மக்கள் பயந்து போனார்கள். வயநாடு போலவே இங்கேயும் நிலச்சரிவு வரப்போகிறதா? நிலப்பிளவு ஏன் வந்தது? என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று அனைவரும் சேர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து வனத்துறை அதிகாரிகளும், நிலப்பிளவு ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது., கொடைக்கானல் மலைப்பகுதியில் எந்த நில அதிர்வு பதிவுகள் ஏதும் பதிவாகவில்லை என்றும் கூறியிருந்தனர். எனினும், நிலப்பிளவு ஏன் ஏற்பட்டது? என்ற பீதி மலைகிராம மக்களிடம் நீங்கவேயில்லை.
நிலப்பிளவுக்கு என்ன காரணம்
இதற்கு பிறகு, 3 மாதம் கழித்து, கடந்த அக்டோபர் மாதம் கூனிப்பட்டி வனப்பகுதியில் திடீரென நிலப் பிளவுகள் ஏற்பட்டு பீதியை தந்துவிட்டன.. கொடைக்கானலில் இருந்து 45 கி.மீ தொலைவில் உள்ளது இந்த கூனிப்பட்டி..
இதனால் புவியியல் மற்றும் வனத்துறையினர் இதுகுறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டதுடன், அந்த மண்ணின் தன்மை குறித்தும் ஆய்வு செய்தனர். இறுதியில், கூனிப்பட்டி அருகே நீர்நிலையில் இருந்து தண்ணீர் அதிகளவில் பூமிக்குள் உட்புகுந்ததால் பிளவு ஏற்பட்டிருக்கலாம் என்றும், நிலப் பிளவு பற்றி மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த வருடம் அதே காலகட்டத்தில் நிகழ்ந்தது போலவே, அதே கொடைக்கானலில் கிளாவரையில் மீண்டும் நிலப்பிளவு ஏற்பட்டுள்ளது.
200 அடியில் நிலம் பிளவு
கொடைக்கானல் கிளாவரை கிராமத்தில் 200 அடிக்கு நிலம் பிளந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியும் கலக்கமும் அடைந்துள்ளார்கள்.. செருப்பனோடை அருகே நிலம் இரண்டாக பிளந்துள்ளதாலும் பேரதிர்ச்சியில் உறைந்துள்ளனர்..
கடந்த வருடம் 300 அடிக்கு ஏற்பட்ட நிலப்பிளவு, மேலும் 200 அடிக்கு நிலம் பிளந்துள்ளது... இதனால் கிளாவரை பகுதிக்கு செல்லும் குடிநீர் தடைபட்டுள்ளது.. மேலும் பாசனம், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.. நிலம் பிளந்து கிடப்பதால் 30 க்கும் மேற்பட்ட ராட்சத மரங்கள் அங்கே முறிந்து விழும் ஆபத்தில் உள்ளதாம்.. எனவே நிலப்பிளவு குறித்து கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications