டிரஸ்ஸும் இல்லை.. சுயநினைவும் இல்லை.. தோட்டத்தில் விழுந்து கிடந்த வடமாநில பெண்.. திண்டுக்கல்லில்!
நிர்வாணமாக விழுந்து கிடந்த வடமாநில பெண்ணை போலீசார் மீட்டுள்ளனர்
திண்டுக்கல்: யார்னு தெரியல.. தோட்டத்தில் நிர்வாணமாக... சுயநினைவு இன்றி விழுந்து கிடந்த வடமாநில பெண்ணை சின்னாளப்பட்டி போலீசார் மீட்டுள்ளனர்... அவரது உடம்பில் காயங்கள் உள்ளதால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
தற்போது லாக்டவுன் அமலில் இருந்தாலும் வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.. பாலியல் பலாத்காரம் முதல் குற்ற செயல்கள் அதிகரித்தபடியே வருகின்றன.

குறிப்பாக பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் கட்டுக்கடங்காமல் உள்ளது.. அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளன. இந்நிலையில், தமிழகத்தை நம்பி எத்தனையோ வடமாநிலத்தினர் பிழைப்பு தேடி வருகிறார்கள்.. அவர்களின் உயிருக்கும், மானத்துக்கும்கூட உத்தரவாதம் இல்லாத துர்நிலை உள்ளது!
அப்படித்தான் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. சின்னாளபட்டியை அடுத்து முருகன்பட்டி அருகே ஒரு ரயில்வே பாதை பகுதி உள்ளது.. இங்கு ஆத்தி என்பவருக்கு சொந்தமான தோட்டம் இருக்கிறது.. இந்த தோட்டத்தில் அரை நிர்வாணத்துடன் ஒரு பெண் மயங்கி விழுந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர் போலீசார்.. பாதிக்கப்பட்ட பெண் வடமாநில பெண் என தெரிகிறது.. அவரது வாய், தாடை, முகத்தில் படுகாயங்கள் உள்ளனவாம்.. நிர்வாண கோலத்தில் விழுந்து கிடந்திருக்கிறார்.. சுயநினைவு சுத்தமாக இல்லை.. உடனடியாக அந்த பெண்ணை மீட்டு, ஆடைகள் அணிவிக்கப்பட்டது.. பிறகு 108-ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மயங்கி விழுந்த கிடந்த இடத்தில், அவரது டிரஸ்களும், மதுபாட்டிலும் கிடந்தன.. அவைகளையும் போலீசார் கைப்பற்றினர்.. அந்த மதுபாட்டிலில் இருந்த கைரேகையையும் சேகரித்தனர்.. இதற்கு பிறகு, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண்ணிடம் விசாரணையை தொடங்கியபோது, அவருக்கு தமிழ் தெரியவில்லை.. மராட்டியில் பேசினாராம்.
தனியார் மில் ஒன்றில் வேலை பார்ப்பதாகவும், நேற்று நைட் தண்ணி அடித்ததாகவும் சொன்னார்.. ஆனால், அதற்கு பிறகு என்ன நடந்தது என தனக்கு தெரியவில்லை என்கிறார்.. பிறகு தனக்கும் எதுவும் ஆகவில்லை, நல்லாதான் இருக்கேன் என்றும் சொல்கிறார்.. இப்படியே முன்னுக்கு பின் முரணாக பேசிவருகிறாராம்..
ஒருவேளை மனநிலை பாதிகப்பட்ட பெண்ணாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.. இருந்தாலும், மராட்டிய மொழி பேசும் பெண் இங்கே எப்படி வந்தார்? அந்த தோட்டத்தில் இவருக்கு என்ன வேலை? மர்ம நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
-
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications