போதையில் ‛டார்ச்சர்’.. கணவரின் அந்தரங்க உறுப்பில் தாக்கி கொன்ற மனைவி.. திண்டுக்கல் அருகே ஷாக்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அருகே ‛டார்ச்சர்' செய்த கணவரின் அந்தரங்க உறுப்பில் இரும்பு கம்பியால் தாக்கி மனைவியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட மனைவி போலீசில் அளித்த வாக்குமூலம் திடுக்கிட செய்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே தெற்கு விராலிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வீரய்யன் (வயது 35). கட்டட பணியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கும், அபிராமி (31) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது.

இந்த தம்பதிக்கு மொத்தம் 3 குழந்தைகள் உள்ளனர். அதாவது 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதற்கிடையே தான் வீரய்யனுக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர் வேலைக்கு சென்று வீடு திரும்பும்போது அடிக்கடி மதுபானம் குடித்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இதனை அபிராமி கண்டித்துள்ளார். ஆனாலும் வீரய்யன் அதனை கண்டுக்கொள்ளாமல் தினமும் போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். மேலும் இரவு நேரத்தில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவும் வீரய்யன் மதுபானம் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
இந்த வேளையில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வீரய்யன், அபிராமி ஆகியோர் ஒருவரையொருவர் தாக்கி உள்ளனர். வீரய்யன் ஆக்ரோஷமாக அபிராமியை தாக்கியதாக கூறப்படுகிறத. இதனால் ஆத்திரமடைந்த அபிராமி இரும்பு குழாயை எடுத்து வீரய்யனின் மர்மஉறுப்பில் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் நிலைக்குலைந்துபோன வீரய்யன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து இறந்துள்ளார். இதனால் பயந்துபோன அபிராமி அங்கிருந்து தலைமறைவானார். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வீரய்யனின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தலைமறைவாக இருந்த அவரது மனைவி அபிராமியை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் சம்பவம் குறித்து அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். தினமும் மதுபானம் குடித்து வந்து டார்ச்சர் செய்தார். இதனால் பிரச்சனை ஏற்பட்டது. தற்போதும் அந்த பிரச்சனையில் அவரை தாக்கியபோது இறந்தார் என தெரிவித்ததாக கூறியுள்ளார். இதையடுத்து அபிராமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications