திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு இருக்கட்டும்.. அதிமுகவை காலி செய்ய இந்த ஒரு அமைச்சர் போதும்!

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுகவை காலி செய்ய இந்த ஒரு அமைச்சர் போதும்!- வீடியோ

    பழனி: பாலாற்றில் தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியின் போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறிய ஒரு பதிலால் அதிமுக தொண்டர் அதிர்ச்சி அடைந்தார்.

    அதிமுக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் தற்போது பேசி வருவதை பார்த்தால் இதற்குத்தான் இவர்களை ஜெயலலிதா பேசவிடாமலேயே வைத்திருந்தார் என்று எண்ணத் தோன்றுகிறது.

    என்ன பேசுகிறோம், எப்படி பேசுகிறோம் என்றே தெரியாமல் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி வருகிறார்கள்.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    அதிலும் திண்டுக்கல் சீனிவாசன் பேசுவதெல்லாம் அதிமுக அரசுக்கு ஆப்பு வைப்பதை போன்றே உள்ளது. ஒரு விழாவில் பேசிய அமைச்சர், ஜெயலலிதா இட்லி சாப்பிடவில்லை, உப்புமா சாப்பிடவில்லை, நாங்கள் பொய் சொன்னோம் என்று கூறி அதிர்ச்சி அளித்தார்.

    பிரதமர் நரசிம்மராவ்

    பிரதமர் நரசிம்மராவ்

    தம்பிதுரையை பற்றி ஒரு விழாவில் புகழ்ச்சியாக கூறி வந்தார் திண்டுக்கல் சீனிவாசன். அப்போது அவர் இன்று கரூரில் இருப்பார், மதியம் வேறு ஊரில் இருப்பார் சாயந்திரம் டெல்லிக்கு சென்று பிரதமர் நரசிம்மராவுடன் பேசி கொண்டிருப்பார் என்றார். இதை கேட்ட மக்களுக்கும் தொண்டர்களுக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது.

    ஜெயலலிதா

    ஜெயலலிதா

    சசிகலாவுக்கு கவுன்ட்டர் கொடுக்கிற பேர் வழி என்று நினைத்துக் கொண்டு கோடிக் கணக்கில் கொள்ளையடித்து சொத்து சேர்த்தவர் ஜெயலலிதா என்று கூறினார். அதாவது சசிகலா என்பதற்கு பதிலாக ஜெயலலிதா என்று உளறி விட்டார்.

    பாசனத்துக்கு

    பாசனத்துக்கு

    தற்போது திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பாலாற்றில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார்.

    பணம் கொடுத்தார்கள்

    பணம் கொடுத்தார்கள்

    அப்போது அதிமுக தொண்டர் ஒருவர் இதுவரை கட்சியிலிருந்து ஓராயிரம் ரூபாய் கூட ஒதுக்கவில்லையே என கேட்டார். அதற்கு திண்டுக்கல் சீனிவாசனோ, அதான் ஓட்டு போடும் போது பணம் கொடுத்தார்களே என்றார். எனவே அதிமுக அரசை கவிழ்க்க வேறு யாரும் தேவையில்லை, இதுபோன்ற அமைச்சர்களே போதும்.

    English summary
    Minister Dindigul Srinivasan replies that they already gave money for voting.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X