''இந்த ஆட்சி எவ்வளவு கேவலமா இருக்குனு பாருங்க''... மேடையில் உளறிக்கொட்டிய திண்டுக்கல் சீனிவாசன்!
திண்டுக்கல்: தமிழகத்தில் இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது என்று பாருங்கள் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மேடையில் பேசியது தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தின் சில அமைச்சர்கள் என்ன பேசுகிறோம் என்பது தெரியாமல் சமீபகாலமாக உளறிக்கொட்டி வருவது வழக்கமாகிவிட்டது.

திண்டுக்கல்லில் அ.தி.மு.க சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தல் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:-தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 தரக்கூடாது என்று நீதிமன்றத்தில் தி.மு.க.வினர் தடை உத்தரவு கேட்டனர். ஆனால் நீதியரசர்கள் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதனால் நாமெல்லாம் மகிழ்ச்சியாக பொங்கல் பரிசு ரூ.2500ஐ பெற முடிந்தது.
இதை வாழ்த்த மாட்டீர்கள். ஆனால் நீங்கள் சொன்னதையெல்லாம் நாங்கள் கொடுத்தாச்சு என்றால் கேட்பையில் நெய் வடிகிறது என்றால் கேட்பாருக்கு புத்தி எங்க போச்சு அறிவு என்று தான் சொல்வார்கள்" எனத் தெரிவித்தார்.
மேலும், அவர் ''தயவு செய்து இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது என்று பாருங்கள். எவ்வளவு அசிங்கமாக போய்க்கிட்டு இருக்கிறது என்று சிந்தியுங்கள்" என பேசியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. என்ன பேசுகிறோம் என்பது கூட தெரியாமல் மேடையில் அமைச்சர் உளறிக் கொட்டியது தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications