திராவிட மாடலையும் ஆன்மீகத்தையும் பிரிக்கவே முடியாது.. சொல்கிறார் அமைச்சர் எ.வ.வேலு

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திராவிட மாடல் ஆட்சியையும் ஆன்மீகத்தையும் பிரித்து பார்க்கவே முடியாது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி - தாராபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையை இருவழி சாலையாக உள்ளதை 4 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணியை நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.

Minister E Ve Velu says about dravidian model regime

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் வேலு பேசுகையில் இந்த 4 வழிச்சாலை திட்டத்தை மத்திய அரசுதான் செய்ய வேண்டும். அவர்களிடம் வருவாய் அதிகமாக இருக்கிறது. ஆனால் அவர்கள் செய்ய மாட்டார்கள். இதனால் முதல்வரே முயற்சித்து கிராமங்களை இணைக்கும் சாலைகளை எல்லாம் 4 வழிச்சாலையாக மாற்றி வருகிறார்.

இதற்கு பெயர் முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டம் ஆகும். அந்த வகையில் 2022- 2023 ஆம் ஆண்டுக்கான நெடுஞ்சாலைத் துறையின் மானியக் கோரிக்கையில் இந்த திட்டத்தை எதிர்வரும் 10 ஆண்டுகளில் 2,200 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளை மேம்படுத்தி 4 வழிச்சாலைகளாக மாற்றும் உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.

ஒட்டன்சத்திரம் நகரப் பகுதியில் 8 கி.மீ. தொலைவுக்கு 90 கோடி ரூபாய்க்கு 2021- 2022 ஆம் ஆண்டு அறிவித்து செய்து முடிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 39 வருவாய் மாவட்டங்கள் இருக்கின்றன. நான் மாவட்டச் செயலாளராக இருக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

ஆனால் ஒட்டன்சத்திரம் தொகுதியில் அறிவிக்கப்பட்ட ஆண்டே பணி நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. திண்டுக்கல் என்றாலே முதல்வருக்கு ஈர்ப்பு அதிகம். அதனால்தான் அந்த மாவட்டம் தொடர்பான கோப்புகளில் உடனே கையெழுத்திடுகிறார். இந்தியாவிலேயே தரைப்பாலம் இல்லாத மாநிலமாக தமிழகம் திகழும். திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கு எத்தனை சலுகைகள்!

கடந்த அதிமுக ஆட்சியில் பெண்கள் கேட்பாரற்று கிடந்தனர் . ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி, பேருந்துகளில் இலவச பயணம், பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ 1000 உதவித் தொகை, வீட்டில் இருந்து பெண்களுக்கு ரூ 1000 உரிமைத் தொகை என கொடுக்கப்பட்டது.

தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சிதான். அதை மறுப்பதற்கு இல்லை, இந்த ஆட்சியில் அதிக பலனை பெறுவது ஆன்மிகம் என்றால் அது மிகையல்ல. திராவிட மாடல் ஆட்சியையும் ஆன்மிகத்தையும் பிரித்து பார்க்கவே முடியாது. திராவிடத்துக்குள்ளாகத்தான் ஆன்மீகம் இருக்கிறது. எனவே ஆன்மீகத்தையும் திராவிடத்தையும் பிரித்து பார்க்கவே முடியாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+