பழனி முருகன் கோவிலை மேம்படுத்த ரூ.200 கோடி! முதல்வர் ஒப்புதல்! அமைச்சர் சேகர்பாபு புதிய தகவல்!
திண்டுக்கல்: பழனி முருகன் கோவில் மேம்பாட்டுக்காக ரூ.200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறியுள்ளார்.

முன்னதாக வரும் ஜனவரி 27ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் பழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழாவுக்கான பந்தல் கால் நடும் நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் இந்து விரோதப் போக்கை கடைபிடிக்கும் என தேர்தலின் போது சில அமைப்பினர் பிரச்சாரம் செய்த நிலையில், அதனை தவிடுபொடியாக்கும் விதமாக அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
அந்த வகையில் தான் பழனி முருகன் கோவிலை மேம்படுத்த ரூ.200 கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் கொடுத்து இந்து சமய அறநிலையத்துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதை முதல்வர் ஸ்டாலின் நிரூபித்துள்ளார்.
அண்மையில் திருச்செந்தூர் முருகன் கோவில் மேம்பாட்டுக்காக பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 56 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 13 திருக்கோயில்களில் இராஜகோபுரங்கள், மகா மண்டபம், திருமண மண்டபங்கள், அர்ச்சகர் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு, வணிக வளாகம், மலைப் பாதை சீரமைத்தல், மதிற்சுவர் கட்டுதல், போன்ற 16 புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்னர் தொடங்கி வைத்தார்.

பழனி முருகன் குடமுழுக்கு விழா வரும் ஜனவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் அமைச்சர்கள் சக்கரபாணி, சேகர்பாபு மற்றும் செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications