திண்டுக்கல் மாவட்டத்தில் மீண்டும் பலத்த வெடிசப்தம்- மக்கள் அச்சம்- காரணம் தெரியாமல் குழப்பம்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் மீண்டும் இன்று பிற்பகல் பலத்த வெடிசப்தம் கேட்டது. இதனால் வீடுகள் குலுங்கின. பல ஆண்டுகளாக தொடரும் இந்த மர்ம வெடிசப்தம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் சரியான விளக்கம் தரப்படாததால் குழப்பமும் பீதியும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்கின்றனர் பொதுமக்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அவ்வப்போது விமானங்கள் தாழ்வாக பறக்கும் பயங்கர இரைச்சல், திடீரென நிலநடுக்க அதிர்வுகளுக்கு இணையாக உறைய வைக்கும் வெடிசப்தம் கேட்பது உண்டு. கடந்த சில ஆண்டுகளாக இந்த வெடிசப்தம் புரியாத புதிராக இருந்து வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தின் பெரும்பான்மை பகுதிகளை அதிரவைக்கும் இந்த வெடிசப்தம் எதனால் ஏற்பாடுகிறது? என பலமுறை நாமும் கேள்வி எழுப்பி இருக்கிறோம். இது தொடர்பாக தமிழ்நாடு சட்டசபையில் வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன் கேள்வியும் எழுப்பி இருந்தார்.
பொதுவாக இத்தகைய வெடிசப்தங்கள் ஏற்பட்ட உடன், மாவட்ட நிர்வாகமானது இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என ஒரு அறிக்கை கொடுப்பதுடன் நிறுத்திவிடும். ஆனால் எதனால் இத்தகைய வெடிசப்தங்கள் நிகழுகின்றன என்பதற்கான விடைதான் தெரியவில்லை.
கடந்த மார்ச் மாதமும் இதேபோல சப்தம் கேட்டது. இன்று பிற்பகல் 1.30 மணியளவில் திண்டுக்கல் மாவட்டத்தில் மீண்டும் பலத்த வெடிசப்தம் அதிரவைத்தது. வீட்டின் ஜன்னல், கதவுகள் கடுமையாக அதிர்ந்தன. இத்தகைய வெடிசப்தம் மீண்டும் திண்டுக்கல் மாவட்ட மக்களிடையே பீதியை உருவாக்கி இருக்கிறது.
திண்டுக்கல்- கரூர் மாவட்ட எல்லையான ரெங்கமலை, கருமலை பகுதிகளில் பல ஆண்டுகளாக மத்திய புவியியல் துறையினர் ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த ஆய்வு எதற்காக நடத்தப்படுகிறது என்பது தெரிவிக்கப்படவில்லை. அப்பகுதிகளில் புவியியல் துறையினர் மார்க்கிங் கற்களை ஊன்றி இருப்பதும் எதற்காக என்பதும் தெரிவிக்கப்படவில்லை. மலைப்பகுதியில் நிலத்தடியில் கனிமவளம் தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறதா? என்பதும் விளக்கப்படவில்லை.
மேலும் குஜிலியம்பாறை பகுதியில் கல்குவாரிகள் நீண்டகாலமாக செயல்படுகின்றன. அந்த கல்குவாரிகளில் வைக்கப்படுகிற வெடிகள்தான் இத்தனை சக்திவாய்ந்ததாக இருக்கிறதா? என்பதையும் மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்தப்படவில்லை.
திண்டுக்கல் மாவட்டத்தில் விமான நிலையம் இல்லை. ஆனால் இடைவிடாமல் விமானங்கள் தாழப்பறக்கும் பேரிரைச்சலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இவை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தெளிவான விளக்க அறிக்கை கொடுத்து அச்சத்தைப் போக்க வேண்டும் என்பது திண்டுக்கல் மாவட்ட மக்களின் வேண்டுகோள்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications