ஒருநாள் மட்டும் கிளாஸ் எடுத்த நிகிதா.. மாதம் முழுவதும் மெடிக்கல் லீவு! இதுதான் காரணமா? பரபர தகவல்!
திண்டுக்கல்: சிவகங்கையில் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா நீண்ட விடுமுறைக்கு பிறகு தனது பேராசிரியர் பணிக்கு திரும்பினார். இந்த நிலையில் ஒரு நாள் மட்டுமே பாடம் நடத்திய அவர் மீண்டும் விடுமுறையில் சென்றார். இந்த நிலையில் கல்லூரிக்கு தேவையில்லாமல் கெட்ட பெயர் வரும் என்பதால் நிகிதாவை ஜூலை 27ஆம் தேதி வரை மருத்துவ விடுப்பில் செல்லுமாறு கல்லூரி நிர்வாகம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மனப்புரத்தில் புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவிலில் பாதுகாவலராக அஜித் குமார் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா என்பவர் தனது தாயுடன் சென்றார்.
தொடர்ந்து தங்களது காரை பார்க்கிங் செய்ய வேண்டுமென அஜித்குமாரிடம் அந்த பெண் சொன்னதாக சொல்லப்படுகிறது. முன்னதாக கூட்ட நெரிசல் காரணமாக தாங்கள் அணிந்திருந்த 10 சவரன் நகையை அந்த பெண்ணும் காரில் வைத்திருந்தாகச் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே கோவிலுக்கு சென்று விட்டு பார்த்தபோது காரின் பின் சீட்டுக்கு அடியில் வைத்திருந்த 10 சவரன் நகையை காணவில்லை என அந்த பெண் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் கூறியிருக்கிறார்.
இதை அடுத்து கோவில் ஊழியர்கள் அஜித்குமாரை திருபுவனம் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து இருக்கின்றனர். திருபுவனம் குளம் அருகிலும், கோவில் வளாகத்தில் உள்ள தென்னந்தோப்புக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் வைத்து அஜித்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
மேலும் அஜித்குமாரின் சகோதரரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் காவல்துறை விசாரணையில் இருந்தபோது அஜித்குமார் உயிரிழந்தார். இதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் இறந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். போலீசார் தாக்கியதால் தான் அஜித்குமார் உயிரிழந்ததாக கூறிய உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அஜித்குமார் மரணம் தமிழக அளவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அஜித்குமார் மீது பொய்யான புகார் அளித்ததாகவும், புகார் தந்த நிகிதா மீது பல்வேறு பண மோசடி புகார்கள் இருப்பதாக கூறப்பட்டது. தொடர்ந்து நிகிதா தலைமறைவாகிவிட்டதாகவும் சொல்லப்பட்ட நிலையில் தன் மீது என்ற குற்றச்சாட்டும் இல்லை என அவர் மறுத்தார். ஆனால் நிகிதா தன்னை ஏமாற்றியதாக திருமாறன் உள்ளிட்ட பலர் புகார் கொடுத்திருக்கின்றனர். திருமணம் செய்து அவர்களிடம் விவாகரத்து பெற்று பணம் பெற்று மோசடி செய்வதுதான் நிகிதாவின் வேலை எனவும் புகார் கூறுகின்றனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் நிகிதா தலைமறைவாக இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் தான் மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா திண்டுக்கல் அரசு எம்விஎம் மகளிர் கலைக்கல்லூரியில் பணியாற்றி வருவது தெரிய வந்தது. தற்போது தாவரவியல் துறை தலைவராக இருக்கும் அவர் கடந்த 6ஆம் தேதி வரை நீண்ட மருத்துவ விடுப்பில் சென்றார்.
இந்நிலையில், கடந்த 10 தினங்களாக விடுமுறையில் சென்ற நிகிதா நேற்று முன் தினம் ( 07.07.25) விடுமுறை முடிந்து காலை வழக்கம் போல் கல்லூரிக்கு வருகை தந்தார். பின்னர் வகுப்பறைக்கு சென்று மாணவிகளுக்கு பாடம் நடத்தினார். இந்த நிலையில் நேற்று (08.07.25) முதல் வருகின்ற 27.07.25 வரை மருத்துவ விடுப்பில் சென்றுள்ளதாக கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மீண்டும் 28ஆம் தேதி பணிக்கு திரும்புவார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நிகிதா கல்லூரிக்கு வந்த போது ஏராளமான செய்தியாளர்கள் அவரை புகைப்படம் எடுக்க முயன்றனர். ஆனால், இரண்டு பேரின் பாதுகாப்போடு அவர் கல்லூரிக்குள் சென்ற பின், பணி முடிந்து பின் வாசல் வழியாக வெளியே சென்றதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நிகிதாவால் கல்லூரிக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதாலும் சர்ச்சைகளை தவிர்க்கும் வகையில் அவரை இந்த மாதம் முழுவதும் மருத்துவ விடுப்பில் செல்லுமாறு கல்லூரி நிர்வாகமே வலியுறுத்தியதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications