அப்படியே இரண்டாக பிளந்த பூமி.. கண்முன்னே வந்து போன வயநாடு! கொடைக்கானலில் குவிந்த அதிகாரிகள்!
திண்டுக்கல் : கொடைக்கானல் கிளாவரை அருகே நிலப் பிளவு ஏற்பட்டதால் மக்கள் கடும் அச்சமடைந்தனர். இந்நிலையில் கொடைக்கானல் மலைப் பகுதியில் நில அதிர்வு ஏதும் ஏற்படவில்லை, அதிக வெயில் மற்றும் மழை காரணமாக நிலத்தில் பிளவு ஏற்படுவது இயற்கையாகவே நடைபெறுவது தான் எனவும், அதனால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என புவியியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
வயநாடு நிலச் சரிவை தொடர்ந்து நீலகிரி, கோவை, கொடைக்கானல் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நிலநடுக்க அபாயமும் நிலச்சரிவு அபாயமும் இருப்பதாக தகவல் பரவியது.

இதனை இந்திய புவியியல் கண்காணிப்பகமும், வானிலை ஆய்வு மையமும் மறுத்தது. அதே நேரத்தில் கேரளா மற்றும் அதனை ஒட்டி உள்ள மலைப்பகுதிகளில் வசித்து வந்த மக்கள் மழை பெய்யும் போதெல்லாம் ஒருவித அச்சத்தோடு இருந்தனர்.
இந்த நிலையில் இருக்கும் கொடைக்கானல் மலைப்பகுதியில் நிலப் பிளவு ஏற்பட்டது அப்பகுதி மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிளாவரை கிராமம் அமைந்துள்ளது இந்த கிளாவரை கிராமத்தில் இருந்து சுமார் 8 கிமீ தொலைவில் இருக்கக்கூடிய ஆனைமலை புலிகள் காப்பகம் வன பகுதிற்கு உட்பட்ட செருப்பநோடை எனும் பகுதி உள்ளது.
இங்கிருந்து கிளாவரை கிராமத்திற்கு குழாய்கள் மூலமாகவும், வாய்க்கால் மூலமாகவும் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக அந்த பகுதியில் இருந்து தண்ணீர் வரவில்லை என பொதுமக்கள் தெரிவித்திருந்தனர். அதனை தொடர்ந்து இந்தப் பகுதியில் இருக்கக்கூடிய கிராம மக்கள் சிலர் அந்த செருப்பநோடை பகுதிக்கு சென்று பார்த்த பொழுது அங்கு நிலத்தில் சுமார் 300 அடி நீளத்துக்கு மேலாக நிலத்தில் பிளவு ஏற்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதனை தொடர்ந்து நிலத்தில் பிளவு ஏற்பட்டு காட்சிகளை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தனர். அதனை தொடர்ந்து கொடைக்கானல் வானியல் ஆய்வக விஞ்ஞானிகள் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தற்போது வரை எந்த ஒரு நில அதிர்வு ஏற்பட்டதற்கான எந்த ஒரு அறிகுறியும், தென்படவில்லை என அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருந்தனர். இருந்த போதிலும் இந்த வனப் பகுதிக்குள் உள்ள நிலத்தில் இந்த பிளவு ஏற்பட்டதுக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

தொடர்ந்து இதனால் வேறு பாதிப்புகள் ஏதும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா என்ற பல்வேறு குழப்பத்திலும் இருந்த இப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து அதன் முழு தகவலையும் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர். இதனை தொடர்ந்து நேற்று உடுமலைப்பேட்டை ஆனைமலை புலிகள் காப்பக வந்தரேவு வனச்சரகர், புவியியல் தொழில்நுட்ப உதவி இயக்குனர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, காவல் துறை மற்றும் வருவாய்த்துறை ஆகிய துறையை சேர்ந்த அலுவலர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் பழனி எம்.எல்.ஏ. செந்தில்குமார், திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் ஆகியோரும் உடன் சென்றனர். தொடர்ந்து நில பிளவு ஏற்பட்ட இடத்திற்கு சென்ற அதிகாரிகள், மண்ணின் தன்மை குறித்து ஆய்வு செய்ய மண் மாதிரிகளை புவியியல் துறையினர் சேகரித்தனர். பின்னர் பேசிய அவர்கள்," மண் மாதிரிகள் ஆய்வுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன. கொடைக்கானல் மலைப் பகுதியில் நில அதிர்வு ஏதும் ஏற்படவில்லை, அதிக வெயில் மற்றும் மழை காரணமாக நிலத்தில் பிளவு ஏற்படுவது இயற்கையாகவே நடைபெறுவது தான் எனவும், அதனால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என புவியியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications