சும்மா கிழி.. திண்டுக்கல் சீனிவாசன் வைத்த இபிஎஸ் பேனர்! கிழித்து எரிந்த ‘ஓபிஎஸ்’ தொண்டர்கள்! பரபர..!
திண்டுக்கல் : திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மாலை அணிவித்து வெடி வெடித்து கொண்டாடிய போது அங்கிருந்த இபிஎஸ் பிளக்ஸ் பேனர் கிழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Recommended Video
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை அடுத்து ஓபிஎஸ் இல்லம் முன்பாக அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அக்கட்சியின் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.

அதிமுக பொதுக்குழு
இந்நிலையில் அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பளித்துள்ளார். அதன்படி, கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது, எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என்றும் தீர்ப்பளித்தார்.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
மேலும் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இணைந்தே பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து இதனையடுத்து ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், ஓ.பி.எஸ்க்கு ஆதரவாக, அதிமுக கழக நிரந்தர ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் வாழ்க என வாழ்த்து கோசங்களை எழுப்பியும் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாயத்தேவர் மகன்
அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் மறைந்த முன்னாள் எம்பியும், அதிமுகவின் முதல் மக்கள் பிரதிநிதிமான மாயத்தேவரின் மகன் உள்ளிட்ட ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஊர்வலமாக வந்து திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை அருகே பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். தொடர்ந்து ஓபிஎஸ் வாழ்க எடப்பாடி ஒழிக என முழக்கமிட்டபடி எம்ஜிஆர் சிலை பீடத்தில் ஏறி எம் ஜி ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

எடப்பாடி பழனிசாமி
அப்போது எடப்பாடி ஒழிக என முழக்கமிட்ட தொண்டர் ஒருவர் எம்ஜிஆர் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த பெரிய பிளக்ஸ் பேனரில் இருந்த எடப்பாடி பழனிச்சாமியின் படத்தை கிழித்து அகற்றியனர். மேலும் அருகில் இருந்த எடப்பாடி பழனிச்சாமியின் போஸ்டர்களையும் கிழித்து அகற்றினர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வரும் நிலையில் இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது இந்த பிளக்ஸ் பேனர் திண்டுக்கல் சீனிவாசன் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு மாவட்டம் சார்பில் வைக்கப்பட்டது ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர் -
அவர் வரலாறு தெரியுமா.. சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்த கேபி முனுசாமி -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications