Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனசுக்கேத்த மாப்பிள்ளைய.. மணப்பெண் அலங்காரத்தில் மகள்! மனதை கல்லாக்கி அப்பா செய்த காரியம்! சோகம்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மகளுக்கு திருமணம் நடக்காததால் மனம் உடைந்த தந்தை அவரை கொலை செய்துவிட்டு மணக் கோலத்தில் அலங்கரித்து இறுதி சடங்கு செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மனைவி கோவிலுக்கு சென்று இருக்க, தந்தை எடுத்த முடிவால் அந்த கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கணக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பழனியப்பன். 55 வயதான கட்டிட தொழிலாளியான இவருக்கு விஜயா என்ற மனைவியும், கார்த்திகா, தனலட்சுமி என்ற இரு மகள்கள் இருக்கின்றனர்.

கார்த்திகாவுக்கு திருமணமாகி தற்போது அவர் வெளியூரில் வசித்து வருகிறார். தனலட்சுமிக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை என கூறப்படுகிறது. ஆனால் பல இடங்களில் பார்த்தும் அவருக்கு வரன் அமையவில்லை.

dindigul palani crime

பழனி சோகம்

தனலட்சுமிக்கு சில உடல் நல பிரச்சினைகள் இருப்பதாகவும் அதன் காரணமாகவே திருமணம் நடைபெறவில்லை என சொல்லப்படுகிறது. ஆசை ஆசையாய் வளர்த்த மகளுக்கு திருமணமாகாததால் கடந்த சில நாட்களாகவே பழனியப்பன் மன உளைச்சலில் இருந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பழனியப்பனின் மனைவி தனது மகனுடன் திருச்செந்தூருக்கு சென்றிருக்கிறார். பழனியப்பனும் தனலட்சுமி மட்டுமே வீட்டில் இருந்தனர்.

தந்தை மகள் தற்கொலை

இந்த நிலையில் கோவிலுக்கு சென்ற பழனியப்பனின் மனைவி விஜயா அவரது கணவரை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால் பலமுறை முயன்றும் செல்போன் இணைப்பு கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தனது அருகில் வசிக்கும் உறவினர்களிடம் கூறி பழனியப்பனை தொடர்பு கொள்ள சொல்லுங்கள் என சொல்லி இருக்கிறார். இதனையடுத்து பழனியப்பனின் வீட்டுக்கு உறவினர்கள் வந்து பார்த்த போது வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது.

அதிர்ச்சி சம்பவம்

கதவை தட்டியும் திறக்காததால் ஆயக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து அங்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பழனியப்பன் தூக்கில் சடலமாக கிடந்தார். தனலட்சுமி மயங்கிய நிலையில் இறந்து கிடந்தார். அதே நேரத்தில் தனலட்சுமிக்கு மணப்பெண் போல அலங்காரம் செய்யப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டு இறுதி சடங்கு செய்யப்பட்டு இருந்தது. இதை எடுத்து இருவரது உடல்களையும் கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மணப்பெண் அலங்காரம்

அதில் தனலட்சுமியை கயிற்றால் கழுத்தில் இறுக்கி பழனியப்பன் கொலை செய்துவிட்டு, அதே கயிற்றால் தானும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அதற்குப் பின்னர் தான் இந்த சம்பவத்தின் சோக பின்னணி வெளியானது. தனலட்சுமிக்கு உடல்நிலை பாதிப்பு இருந்ததால் பல நாட்களாக திருமணம் தடைபட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த பழனியப்பன் தனது மகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மனைவியும் மகனும் கோவிலுக்கு சென்ற நிலையில் தனலட்சுமியின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்த அவர், அவருக்கு புதிய பட்டு சேலையை போர்த்தி, பூச்சூடி குங்குமம், திருநீறு பூசி இறுதி சடங்கு செய்திருக்கிறார். பின்பு மகளை கொலை செய்த இதே கயிற்றால் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் எனக் கூறுகின்றனர் உறவினர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+