பழனி போறவங்களுக்கு குட் நியூஸ்.. நாளை முதல் மீண்டும் தொடங்குது ரோப் கார் சேவை

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் மலைக் கோவிலுக்கு பக்தர்கள் செல்லும் ரோப் கார் சேவை கடந்த ஜூலை 15 ஆம் தேதி முதல் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாளை முதல் (ஆகஸ்ட் 20) ரோப் கார் சேவை தொடங்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளுக்கு ஏராளமாான பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு நாள்தோறும் உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

palani-rope-car-service-palani-rope-car-service-will-resume-from-tomorrow

கோவிலுக்கு வரும் பக்தர்கள் படிக்கட்டுப் பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் சேவையைப் பயன்படுத்தி மலைக் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். வார இறுதி நாட்களிலும், பண்டிகை மற்றும் விசேஷ நாட்களிலும் இக்கோயிலில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகளவில் காணப்படும். மின் இழுவை ரயில் ,ரோப்கார் நிலையத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வார்கள்.

பண்டிகை நாட்கள்

கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம், கார்த்திகை, கந்த சஷ்டி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் பக்தர்கள் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருக்கும். பழனிக்கு வருகை தரும் பக்தர்கள் பலரும் ரோப் கார் வழியாக மலைக் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மலைக் கோவில்

குறைந்த நேரத்திலும், எளிதிலும் சென்று வரலாம் என்பதால் பெரும்பான்மையான பக்தர்கள் மலைக் கோவிலுக்கு எளிதில் சென்று வர ரோப் கார் சேவையை பயன்படுத்துகின்றனர். இந்த ரோப் கார் சேவை மூலமாக மூன்று நிமிடத்தில் மலைக் கோயிலுக்கு சென்று வரலாம். இந்த ரோப் கார் மூலமாக பயணிக்கும்போது இயற்கையின் அழகை ரசித்தவாறு செல்லலாம் என்பதால் பொதுமக்கள் பலரும் ரோப் கார் சேவையை விரும்புகின்றனர்.

ரோப் கார் சேவை

இந்த ரோப் கார் சேவை மாதத்திற்கு ஒரு நாளும், வருடத்திற்கு ஒரு மாதமும் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக கடந்த மாதம் ஜூலை 15 ஆம் தேதி முதல் ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டது. ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த பராமரிப்பு பணி தற்போது முடிவடைந்துள்ளது.

மீண்டும் தொடக்கம்

இதைத்தொடர்ந்து, நாளை முதல் (ஆகஸ்ட் 20) முதல் மீண்டும் ரோப் கார் சேவை தொடங்கப்படவுள்ளதாகவும், காலை 9 மணி முதல் இந்த சேவை தொடங்கப்படும் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+