திண்டுக்கல் - பாலக்காடு இடையே 179 கி.மீ. தூர ரயில் மின் பாதையை தொடங்கி வைத்தார் பிரதமர்
திண்டுக்கல்: திண்டுக்கல்- பாலக்காடு இடையே 179 கி.மீ. தூர ரயில் மின்பாதையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி சென்னை- பாலக்காடு அதிவிரைவு ரயில், அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில், பாசஞ்சர் ரயில் மற்றும் பல்வேறு சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த பாதையில் டீசல் என்ஜின் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் திண்டுக்கல் - பாலக்காடு இடையேயான 179 கி.மீ. தூர ரயில் பாதையை மாற்றும் பணி நடந்தது. திண்டுக்கல்- பழனி, பழனி - பொள்ளாச்சி, பொள்ளாச்சி- பாலக்காடு என 3 கட்டங்களாக மின்மயமாக்கல் பணிகள் நடந்து முடிந்தன.
அதில் திண்டுக்கல்- பழனி, பழனி- பொள்ளாச்சி இடையே மின்மயமாக்கல் பணிகள் ஏற்கெனவே நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து பொள்ளாச்சி - பாலக்காடு இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்மயமாக்கல் பணி முடிந்தது. இதைத் தொடர்ந்து திண்டுக்கல்- பாலக்காடு இடையே 179 கி.மீ. தூர ரயில் மின்பாதையில் ரயில் சோதனை ஓட்டம் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில் இந்த ரயில் மின் பாதையை பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரத்தில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் காலை 11 மணிக்கு திறந்து வைத்தார்.












Click it and Unblock the Notifications