சிஎம் ஆக விஜய்.. மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்காங்க! நானும் தான்.. ஓபனாக பேசிய ஆர்ஜே பாலாஜி!
திண்டுக்கல்: முதலமைச்சர் விஜய் பதவியேற்றுள்ளார். தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். அவர் நிறைய நல்லது செய்வார் என்று எல்லோரும் போல் நானும் நம்புகிறேன். எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது என நடிகரும் கருப்பு படத்தின் இயக்குனருமான ஆர்ஜே பாலாஜி கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ராஜேந்திரா திரையரங்கில் திரைப்பட நடிகரும் இயக்குனருமான ஆர்ஜே பாலாஜி "கருப்பு" திரைப்படத்திற்கு வருகை தந்தார். பின்னர் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், ரசிகர்கள் அனைவரும் கேக் வெட்டி புகைப்படங்கள் எடுத்து அவரை வாழ்த்தினர்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆர்ஜே பாலாஜி," கருப்பு படத்திற்கான வரவேற்பு அருமையாக உள்ளது. திண்டுக்கல் ராஜேந்திரா திரையரங்கில் ஏழு நாட்களில் 25000 Footfall வந்திருக்கிறது.இதுவரை இப்படி நடந்ததில்லை என்று தெரிவித்தனர். இத்தகைய வரவேற்பை பெற்றுள்ளது.
32 மாதங்கள் வேலை செய்திருக்கோம். அதற்கான பலன் இவ்வளவு பெரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. சூர்யா சார்க்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி பயங்கரமாக இருக்கிறது. தினமும் லவ் யூ சொல்லாமல் போனை வைக்க மாட்டோம். நானும் மீடியாவில் தான் இருந்தேன். மைக் எடுத்துட்டு போவேன். அங்கே இருந்து இன்று சூர்யா சார் மாதிரியான ஹீரோ வைத்து படம் எடுத்து நானும் நடித்து இருக்கிறேன். இதை ஒரு ஆசிர்வாதமாக பார்க்கிறேன்.
சாய் அபியங்கர் வாழ்க என்றார். படத்தோட "பேக்போன்". எல்லா பாடல்களையும் இந்த படத்தில் மக்கள் நின்றுகொண்டே தான் பார்க்கிறார்கள். இதற்கு காரணம் அவர் தான். முதலமைச்சர் விஜய் பதவியேற்றுள்ளார்.
தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். அவர் நிறைய நல்லது செய்வார் என்று எல்லோரும் போல் நானும் நம்புகிறேன். எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது.
கருப்பு படத்தில் சாமியை வைத்து எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது என்றால், ஒருமுறை மாசாணி அம்மன் கோவிலுக்கு சென்றேன். வாழ்க்கையில் தீராத பிரச்சனை இருந்தால், மிளகாய் அரைத்து தேய்த்து மாசாணி அம்மன் கோயிலில் வழிபட்டால் அது நீங்கும் என்ற ஐதீகம் உள்ளது. ஒருமுறை கத்தி வைத்து கழுத்து, வயிற்று பகுதியில் குத்தி சிக்னலில் என் நகையை திருடி சென்றனர். அதனை வைத்தும் கதையை இணைத்து படமாக எழுதினேன். அனைத்தும் கடவுள் தான் காரணம்.
கருப்பு படம் அடுத்த பார்ட் வருமா என்ற கேள்வி தொடர்ந்து வருகிறது. ஒரு விஷயம் நன்றாக மக்களுக்கு பிடித்திருந்தால் அது தொடர வேண்டும் என்று தான் நானும் சூர்யா அவர்களும் பேசியிருக்கிறோம். நான் அடுத்த மூவ் பற்றி யோசிக்கவே மாட்டேன். கடவுள் அடுத்த படத்தை கொடுப்பார் என்று நம்புகிறேன்." என்றார்.
-
திமுகவிற்கு சோதனை மேல் சோதனை.. சுற்றி நிற்கும் பருந்துகள்! தப்பவே முடியாது போலயே.. ஸ்டாலினுக்கு செக் -
ஸ்டியரிங்கை பிடித்த விஜய்.. 'சிங்கப்பெண்' திட்டத்தை தொடங்கி வைத்து கையோடு ரோந்து வாகனத்தை ஓட்டினார்! -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
பாஜக கோபத்திற்கு ஆளாக நேரிடும்! இந்தியா கூட்டத்திற்கு தவெக போகாதது ஏன்? விஜய் எடுத்த பயங்கர முடிவு? -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
சிக்கும் செந்தில் பாலாஜி? முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. தோண்டப்படும் டாஸ்மாக் முறைகேடு! -
”ஆபரேசன் அக்னி கலசம்” வன்னியர் ஓட்டுகளை அள்ளுவது எப்படி? விஜய் அமைத்த வியூகம்! பரபரப்பான ’நார்த்’ -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஜய்க்கு அடுத்த அக்னி பரீட்சை.. அமைச்சர்களுக்கு முக்கிய அசைன்மென்ட்! இடைத் தேர்தலுக்கு ரெடியான தவெக -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் விஜய்யின் தவெகவுக்கு அழைப்பு இல்லையா? பின்னணி தகவல் -
கோவில்ல பிஸினஸ் நடக்குது.. விஜய் போட்ட பெரிய ஆர்டர்! யாரும் தப்ப முடியாது! இசஅ அமைச்சர் ரமேஷ் உறுதி!












Click it and Unblock the Notifications