அசைக்க முடியாத அதிமுகவின் எஃகு கோட்டை..50 ஆண்டுகளாக திமுக வெல்லாத நிலக்கோட்டை! மல்லிகை ஊர் யாருக்கு?
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் அரசியல் ரீதியாக எப்போதும் அதிக அளவில் கவனம் பெறும் தொகுதிகளில் ஒன்று நிலக்கோட்டை. கடந்த அரை நூற்றாண்டாக திராவிட முன்னேற்ற கழகம் இந்த தொகுதியில் நேரடியாக வெற்றி பெற முடியாத நிலை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் வரும் தேர்தலில் இந்த வரலாறு மாறுமா? இல்லை, அதிமுகவே மீண்டும் மல்லிகை நகரைக் கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலில் நிலக்கோட்டை தொகுதியில் திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் வலுவான வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன. திமுக சார்பில் முதல் முறையாக பெண் வேட்பாளராக நாக ஜோதி போட்டியிடுகிறார்.

மறுபுறம் அதிமுக சார்பில் தற்போதைய சிட்டிங் எம்எல்ஏ தேன்மொழி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதேபோல் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அய்யனார் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் கயிலைராஜன் உள்ளிட்ட பலரும் போட்டியிடுவதால் இந்த முறை போட்டி பல்முனை போட்டியாக மாறியுள்ளது.
நிலக்கோட்டை தொகுதியில் நிலக்கோட்டை மற்றும் வத்தலக்குண்டு பகுதிகளைச் சேர்ந்த பல கிராமங்கள் உள்ளன. வைகை ஆறு இந்த பகுதிகளை கடந்து சென்றாலும், பல கிராமங்களில் இன்னமும் குடிநீர் பற்றாக்குறை நீடித்து வருவது மக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினையாக உள்ளது. குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது மக்களின் நீண்டகால கோரிக்கையாகவே உள்ளது.
அதேபோல் பாசன வசதி குறைவால் பல நிலங்கள் பயிரிடப்படாமல் தரிசாக கிடக்கின்றன.
விவசாயிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்காததால் பயிர்செய்கை பாதிக்கப்படுகிறது. குறிப்பாக இந்த தொகுதி பூ விவசாயத்திற்கு பெயர் பெற்றது. முன்பு மதுரை மாவட்டத்தின் கீழ் இருந்தபோது 'மதுரை மல்லி' என்ற பெயரைப் பெற்றுத் தந்த பகுதிகளில் நிலக்கோட்டையும் முக்கியமான ஒன்றாக இருந்தது. இங்கிருந்து மலர்கள் வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன.
இருப்பினும் பூ மார்க்கெட்டில் போதிய வசதிகள் இல்லாதது விவசாயிகள் தொடர்ந்து முன்வைக்கும் குறையாக உள்ளது. மேலும், பூக்கள் அதிகமாக விளையும் பகுதி என்பதால் சென்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பதும் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது. தற்போதைய கள நிலவரத்தைப் பார்த்தால், நிலக்கோட்டை தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் உள்ளிட்ட மொத்தம் 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
வழக்கத்தை விட இந்த முறை திமுக பெண் வேட்பாளரை நிறுத்தியிருப்பது அதிமுகவுக்கு சவாலாக பார்க்கப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளாக இந்த தொகுதியில் நேரடியாக திமுக வெற்றி பெறாத நிலையில், இந்த முறை அந்த வரலாற்றை மாற்ற வேண்டும் என்ற கட்டாயத்தில் திமுக உள்ளது. அதே நேரத்தில், நிலக்கோட்டை தங்கள் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிக்க வேண்டும் என்ற நிலை அதிமுகவுக்கும் உள்ளது.
வரலாற்றைப் பார்த்தால், 1977ஆம் ஆண்டு முதல் இதுவரை இடைத்தேர்தல் உட்பட அதிமுக 7 முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் காங்கிரஸ் சார்பில் ஏ.எஸ். பொன்னம்மாள் மூன்று முறை மற்றும் சுயேச்சையாக ஒரு முறை வெற்றி பெற்றுள்ளார். 2011ஆம் ஆண்டு புதிய தமிழகம் கட்சியும் இங்கு வெற்றி பெற்றது. தற்போதைய அதிமுக வேட்பாளர் தேன்மொழி 2006, 2019 இடைத்தேர்தல் மற்றும் 2021 தேர்தல்களில் வெற்றி பெற்று மீண்டும் போட்டியிடுகிறார்.
மறுபுறம், கடைசியாக 1971ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்ட முனியாண்டி தான் இந்த தொகுதியில் வெற்றி பெற்றவர். அதன்பிறகு திமுக சார்பில் போட்டியிட்ட எந்த வேட்பாளரும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை திமுக தனது தேர்தல் வாக்குறுதிகள், குறிப்பாக பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்களை முன்வைத்து வாக்காளர்களை கவர முயற்சி செய்து வருகிறது.
அதே நேரத்தில் அதிமுகவும் தங்களது தேர்தல் வாக்குறுதிகளை முன்வைத்து கிராமங்கள்தோறும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. தவெக மற்றும் நாம் தமிழர் கட்சிகளும் இளைஞர்கள் மத்தியில் ஆதரவை பெருக்க முயற்சித்து வருகின்றன.
நிலக்கோட்டை தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,21,094 ஆகும். இதில் ஆண்கள் 1,08,300 பேர், பெண்கள் 1,12,780 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 14 பேர் உள்ளனர். பல்வேறு கட்சிகள் தீவிரமாக களம் இறங்கியுள்ளதால், இந்த முறை யார் வெற்றி பெறுவார்கள் என்பதை கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இந்த தேர்தல் முடிவு நிலக்கோட்டை அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்பமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
ஒரு நாள் ரெஸ்ட், ஒரு நாள் பிரசாரம்.. திருப்பூரில் நாளை ரோடு ஷோ.. விஜய் வைத்திருக்கும் சர்ப்ரைஸ்! -
"எங்க ஏரியாவுக்கு வா"! சுந்தர் சி முன்பே "ஸ்டைல் பாண்டி" டயலாக் சொன்ன எடப்பாடி! குலுங்கிய மதுரை! -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
நான் ஏன் முதல்வராக ஆகக்கூடாது என்று சொல்கிற காலம் வரும்.. திருமாவளவன் பரபரப்பு பேச்சு -
Election Exclusive: வாயில் வாஸ்து சரியில்ல.. ஜெயிச்சாலும் திண்டுக்கல் சீனிவாசனுக்கு சிக்கல்! திமுக போடும் பலே ப்ளான்? -
₹8000 கூப்பனால் மகிழும் மக்கள்.. நல்ல தலைவருக்கு இது அடையாளம்! விஜயை வேற மாதிரி வறுத்தெடுத்த ரோகிணி -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
ஆம்பூரில் 101 வயது தாத்தா ஓட்டு.. பகீர் தில்லுமுல்லு! தமிழ்நாடு தபால் வாக்குப்பதிவில் வந்த மாற்றம் -
அண்ணியின் கெத்து சிரிப்பு.. எரிச்சலான விசிக.. விருதாச்சலத்தில் முகம் மாறிய பிரேமலதா.. நடந்தது என்ன? -
சுந்தர் சி வேண்டாம்னு ஏன் சொன்னாருனு எனக்கு அப்போ புரியலை, இப்போ புரியுது! அண்ணாமலை கலகல! -
சொன்னா கேளுங்களே முடியலை.. திருப்பூருக்கு வரும் தவெக விஜய்! கடைசி வரை இழுபறி! ஆனந்த் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications