தக்காளி விலை தலைகீழ்.. பீட்ரூட் போட்டவங்க பிச்சை தான் எடுக்கனும்! அதள பாதாளத்தில் காய்கறி விலை! ஷாக்
திண்டுக்கல்: கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தமிழகத்தின் காய்கறி விலை விண்ணை தொட்ட நிலையில் தற்போது பல காய்கறிகளின் விலை வெறும் 10 ரூபாய்க்குள் இருக்கிறது. தக்காளி, முருங்கைக்காய், பீட்ரூட் ஆகியவற்றை பறித்து விற்றாலும், கூலிக்கு கூட கட்டாத நிலையில் இருப்பதால் அவற்றை குப்பையில் கொட்டுகின்றனர் விவசாயிகள். கடனை உடனை வாங்கி காய்கறி பயிரிட்டால் அது தங்களை பிச்சை எடுக்க வைத்து விடும் போல என புலம்புகின்றனர்..
தமிழகத்தில் கடந்த செப்டம்பர் முதல் நவம்பர் வரை மழை பெய்து வந்ததால், புகழ்பெற்ற திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு காய்கறி வரத்து வெகுவாக சரிந்தது. இதனால் காய்கறிகளின் விலை கணிசமாக அதிகரித்ததால் பொதுமக்கள் கடும் இன்னலை சந்தித்தனர்.

வழக்கமாக ஒட்டன்சத்திரம் சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 100 முதல் 110 லாரிகளில் தக்காளி வரும் நிலையில், அப்போது 60 முதல் 75 லாரிகள் மட்டுமே வந்தது. மேலும் மழை, பனி என மாறி மாறி வந்ததால் தக்காளி பழங்கள் செடியிலேயே அழுகி விட்டன. மேலும் பூச்சி தாக்குதலால் காய்கறி விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டது.
அப்போது 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி 600 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டது. ஒரு கிலோ தக்காளி நூறு முதல் 110 ரூபாய் வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது. மேலும் பீன்ஸ், பீட்ரூட், முருங்கைக்காய் ஆகியவற்றின் விளையும் கடுமையாக அதிகரித்தது. அப்போதைய சூழலில் ஒரு கிலோ பீன்ஸ் 200 ரூபாய்க்கும், அவரைக்காய் 120க்கும், தக்காளி 120 ரூபாய்க்கும், இஞ்சி 110 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 60 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 300 முதல் 400 ரூபாய் வரையும் விற்பனையானது.
இந்த நிலையில் தற்போது மழை பனிப் பொழிவு குறைந்து வெயில் அடித்து வருவதால் விளைச்சல் கணிசமாக அதிகரித்துள்ளதால், காய்கறிகள் விலை அதல பாதாளத்தை நோக்கி சென்றுள்ளது. சில காய்கறிகள் வெறும் பத்து ரூபாய்க்குள்ளாகவே விற்பனையாகிறது. தற்போதைய சூழ்நிலை ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி வெறும் 3 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ ஏழு ரூபாய்க்கும், பீட்ரூட் 4 ரூபாய்க்கும், சுரக்காய் இரண்டு ரூபாய்க்கும், கத்தரிக்காய் 7 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதேபோல பல காய்கறிகளின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக பேசி உள்ள விவசாயிகள்," தக்காளி விலை அதிகரிக்கும் போது பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என தமிழ்நாடு அரசு தக்காளியை கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறது. இந்த நிலையில் வீழ்ச்சியாக இருக்கும் போது அது போன்று செய்வதில்லை. எனவே காய்கறிகளுக்கு நிரந்தரமாக விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
விலை அதிகரிக்கும் போது கூட சில விவசாயிகள் மட்டுமே பயன் பெறுகிறார்கள். ஆனால் விலை வீழ்ச்சியானால் ஒட்டுமொத்த விவசாயிகளும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே மத்திய மாநில அரசுகள் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும். காய்கறிகள் பழங்கள் உள்ளிட்டவை அதிகபட்சம் இரண்டு மூன்று நாளைக்கு மேல் தாங்காது. எனவே, அவற்றை பாதுகாத்து வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையேல் குறைந்தபட்சமாக 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையாவது ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கூறுகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications