9 தொகுதிகள் காணாமல் போகும்..தமிழகத்தின் குரலை நசுக்கும் பாஜக! மு.க.ஸ்டாலினுக்கு முத்தரசன் சப்போர்ட்!
திண்டுக்கல்: மத்திய அரசு தமிழகத்தில் நாடாளுமன்ற தொகுதியை குறைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும், இதற்கு ஒரு பொழுதும் அனுமதிக்க முடியாது, தமிழக முதல்வர் விடுத்துள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கின்ற முடிவிற்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
திண்டுக்கல்லில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மாநில குழு கூட்டம் திண்டுக்கல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் தற்போது 39 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த நிலையில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையில் ஆளும் அரசு தொகுதி மறு சீரமைப்பு என்கின்ற பெயரால் நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளை 31 ஆகக் குறைப்பதற்கு ஒன்றிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
மக்கள் தொகை அடிப்படையில் அந்த தொகுதி மறுசீரமைப்பு வந்தால் இப்போது இருக்கக் கூடிய 39 தொகுதிகளில் எட்டு நாடாளுமன்ற தொகுதிகளை தமிழ்நாடு இழக்க வேண்டிய நிலைமை ஏற்படும். மக்கள் தொகை அடிப்படையில் என்பது சட்டரீதியாக சரியாக இருக்கலாம். மத்திய அரசு மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நாடு கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகிறது. ஆகவே மக்கள் தொகையை குறைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை கொண்டு வந்தது.
இந்தத் திட்டத்தை கொண்டு வந்தது ஒன்றிய அரசாங்கம். அந்த திட்டத்தை தமிழ்நாடு முறையாக செயல்படுத்தியது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் பொழுது தமிழகத்தில் மக்கள் தொகை குறைவாக இருக்கிறது. மக்கள் தொகை குறைவை காரணம் காட்டி தமிழகத்தில் 8 நாடாளுமன்ற தொகுதியை பறிப்பது என்பது தமிழகத்தின் உரிமையை பறிக்கக் கூடிய செயலாகும்
ஒன்றிய அரசாங்கம் செய்யக்கூடிய தவறுகளை நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்துவதில் எல்லோரையும் காட்டிலும் தமிழகம் முன்னிலையில் இருக்கிறார்கள். எந்த ஒரு தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்துவதில் முன்மாதிரியாக திகழ்கிறார்கள். ஆகவே குரலை ஒடுக்க வேண்டும் என்பதற்காக எண்ணிக்கை குறைப்பதற்கான முயற்சியை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது மிக மிக வன்மையாக கண்டிக்கத்தக்க செயலாகும். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும் மார்ச் 5ஆம் தேதி கூட்டத்திற்கு தமிழக முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார். ஒன்றிய அரசின் செயலை கண்டித்து தமிழக முதல்வர் மார்ச் ஐந்தாம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எதிர்க்கட்சிகளும் கலந்து கொண்டு ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள அந்த தவறான முடிவிற்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும்.
அந்த கூட்டத்தில் எடுக்கின்ற முடிவுகளை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைக்க வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன். உடனடியாக இப்பிரச்சினையை கவனத்தில் கொண்டு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு இந்திய கம்யூனிசம் கட்சி சார்பில் பாராட்டையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார்.
-
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி வெயிட்டிங்! இவர்களிடம் தமிழ்நாடு சிக்கினால் என்ன ஆகும்? ஸ்டாலின் அட்டாக் -
2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
அரைக் கிணறை தாண்டிய அறிவாலயம்.. அடம் பிடித்த கட்சிகளை கூட்டணியில் அடைத்த திமுக! யாருக்கு எவ்வளவு? -
புதுச்சேரியில் மார்ட்டின் மகனால் தெறித்து ஓடும் பாஜக? ரங்கசாமி போட்ட சைலண்ட் ஸ்கெட்ச்.. அப்போ விஜய் -
வரிசையாக காலை வாரும் தலைவர்கள்.. காங்கிரஸுக்கு விழுந்த மரண அடி.. இப்படியே போன தோல்வி உறுதி! -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்? -
“2 மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?” அதிமுக தலைவர்களின் பேச்சுக்கு ஸ்டாலின் காட்டிய ரியாக்ஷன்! -
ஸ்டாலினை நேரில் சந்தித்த திருமாவளவன்.. காங்கிரஸ் பாணியில் விசிகவின் வியூகம் கைகொடுக்குமா -
கோட்டையை எட்டிப்பிடிக்கும் ‘மகளிர்’ மேஜிக்! ரூ.2000 தேடி வருதுங்க! வங்கி கணக்கில் அடிக்கும் ஜாக்பாட் -
"கவுண்டவுன் ஸ்டார்ட்".. அண்ணா அறிவாலயத்தில் மின்னும் டிஜிட்டல் போர்டு.. திமுகவினர் உற்சாகம்!












Click it and Unblock the Notifications