திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இப்படி எல்லாமா வருவாங்க.. மிரண்ட எஸ்பி.. ஆற்று வெள்ளத்தை துணிச்சலுடன் நீந்தி.. கடைசியில் ட்விஸ்ட்

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: மெயின் ரோட்டில் காவல்துறையினர் பாதுகாப்பிற்கு நின்று இருந்தால் ஆற்று வெள்ளத்தை துணிச்சலுடன் கடந்து வந்து மதுவாங்க திண்டுக்கல் மாவட்ட எல்லைக்குள் வந்த திருப்பூர் மாவட்ட குடிமகன்கள் வந்தார்கள். இதை கேள்விப்பட்டு ஷாக்கான திண்டுககல் மாவட்ட எஸ்பி , குறிப்பிட்ட மதுக்கடைக்கு நேரடியாக வந்து ஆய்வு செய்தார். இதனிடையே காலை 11 மணிக்கே ஸ்டாக் தீர்ந்து போனதால் குடிமகன்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Recommended Video

    திறக்கப்பட்டது TASMAC! குடிமகன்கள் மகிழ்ச்சி | OneIndia Tamil

    தமிழகத்தில் 14ம் தேதியான நேற்று முதல் 27 மாவட்டங்களில் அதிக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது பல்வேறு டீக்கடை முதல் மதுக்கடைகள் வரை பல்வேறு கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    அப்படி தளர்வு அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்று தான் திண்டுக்கல் மாவட்டம். ஆனால் அதன் பக்கத்து மாவட்டமான திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமுள்ளதால் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தின் எல்லையான மடத்துக்குளத்தை ஒட்டி திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன.

    ''ஒரு கையால் கொடுத்து.. மறு கையால் பறிப்பது நியாயமா?''.. எதை சொல்கிறார் டாக்டர் அன்புமணி ராமதாஸ்! ''ஒரு கையால் கொடுத்து.. மறு கையால் பறிப்பது நியாயமா?''.. எதை சொல்கிறார் டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

    தடுத்த போலீஸ்

    தடுத்த போலீஸ்

    ஆனால் திருப்பூர் மாவட்டத்தினர் யாரும் மதுக்கடைகளுக்கு செல்ல முடியாத வகையில் கடுமையான வாகன சோதனை நடத்தியபடி அனைத்து எல்லைப்புறங்களிலும் போலீசார் நின்று இருந்தனர். இதையறிந்த குடிமகன்கள் எப்படியும் திண்டுக்கல் மாவட்ட எல்லைக்குள் சென்று மதுவாங்கியே தீர வேண்டும் என்ற வேட்கையுடன் இருந்துள்ளனர்

    தண்டவாளத்தில் நடந்தனர்

    தண்டவாளத்தில் நடந்தனர்

    மடத்துக்குளம் வழியாக செல்லும் அமராவதி ஆறு இரு மாவட்ட எல்லையாக இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் பழநி, சாமிநாதபுரம் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அடைவதற்காக அமராவதி ஆற்றில் கடும் வெள்ளத்தையும் பொருப்படுத்த்தாமல் நீந்தி மறுகரையை அடைந்து மதுவாங்க வந்தார்கள். இதேபோல் சிலர் ஆற்றின் நடுவே செல்லும் தண்டவாளத்தில் வழியாகவும் வந்தார்கள்.

    எஸ்பி விசாரணை

    எஸ்பி விசாரணை

    இப்படி ஏராளமானோர் வந்ததால் நேற்று அதிகாலை முதலே மடத்துக்குளம் பகுதியில் உள்ள மதுக்கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுமார் 2 கி.மீ., நீளத்துக்கு வரிசை நீண்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் புதிதாக பொறுப்பேற்றுள்ள திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷசாங்க் சாய் நேரில் ஆய்வு செய்தார்.. துணை காவல் கண்காணிப்பாளர் உட்பட 50-க்கும் மேற்பட்ட போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இப்படி ஏராளமானோர் வந்ததால் நேற்று அதிகாலை முதலே மடத்துக்குளம் பகுதியில் உள்ள மதுக்கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுமார் 2 கி.மீ., நீளத்துக்கு வரிசை நீண்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் புதிதாக பொறுப்பேற்றுள்ள திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷசாங்க் சாய் நேரில் ஆய்வு செய்தார்.. துணை காவல் கண்காணிப்பாளர் உட்பட 50-க்கும் மேற்பட்ட போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    குடிமகன்கள் ஏமாற்றம்

    குடிமகன்கள் ஏமாற்றம்

    பொதுவாக சாலைகளில் தான் போலீசார் பாதுகாப்பிற்கு நிற்பார்கள். இதை உணர்ந்த குடிமகன்கள், போலீசாரே எதிர்பார்க்காத வகையில், ஆற்றில்நீந்தியும், ரயில் தண்டவாளத்தில் நடந்தும் குடிமகன்கள் குடிப்பதற்காக வந்திருக்கிறார்கள்.. ஆனால் அப்படி வந்தும் காலை 11 மணிக்கே மொத்த மதுபாட்டில்களும் விற்று தீர்ந்து விட்டதால் மது பிரியர்கள் பலர் சோகத்துடன் திருப்பூர் மாவட்டத்துக்கு திரும்பி சென்றார்கள். இதனிடையே மாவட்டம் விட்டு மாவட்டம் போய் மதுவாங்கி வந்தவர்களிடமும் போலீசார் மதுவை பறிமுதல் செய்த வழக்கு போட்டனர்.

    English summary
    Liquor lovers from Tirupur district came to Dindigul district to cross the river and buy liquor. Meanwhile, citizens were disappointed as the stock ran out at 11am in tasmc shops
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X