திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிங்கில் டிஜிட்டுக்கு ஓகே சொன்ன திமுக & அதிமுக.. தவிப்பில் "திண்டுக்கல் கூட்டணி!

Google Oneindia Tamil News

திண்டுக்கல் : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியில் தங்களுக்கு 10 இடங்களில் சீட்டுகளை ஒதுக்க வேண்டுமென பாஜக கூறி வரும் நிலையில், ஒற்றை இலக்கத்தில் மட்டும் சீட்டுகளை ஒதுக்க அதிமுக முன் வந்திருப்பதால் பாஜகவினர் அதிருப்தியில் உள்ள நிலையில், திமுக கூட்டணியிலும் இதே நிலைதான் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. மொத்தம் 12,838 பதவிகளுக்கு தேர்தல்கள் நடைபெற உள்ளன.

தேர்தலுக்காக இன்று முதல் வேட்புமனு துவங்கியுள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தை பொருத்தவரை திண்டுக்கல் மாநகராட்சி, பழனி, கொடைக்கானல் ஒட்டன்சத்திரம் நகராட்சிகளை கைப்பற்ற கடும் போட்டி அதிமுக திமுகவினரிடம் உள்ளது.

தகிக்கும் பாஜக? போனை எடுக்காத அதிமுக தலைகள்.. நெல்லையில் தகிக்கும் பாஜக? போனை எடுக்காத அதிமுக தலைகள்.. நெல்லையில்

திண்டுக்கல் மாநகராட்சி

திண்டுக்கல் மாநகராட்சி

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டு பகுதிகளில் போட்டியிடக் கூடிய அங்கீகரிக்கப்பட்ட கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் தடையில்லா சான்றிதழ் பெறுவதற்கு ஆர்வத்துடன் படிவத்தை பெற்று செல்கின்றனர். கிட்டத்தட்ட வேட்பாளர் பட்டியலை பிரதான கட்சிகள் இறுதி செய்துள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு வார்டு பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

அதிமுக கூட்டணி

அதிமுக கூட்டணி

அதிமுகவை பொருத்தவரை திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன், கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தங்கள் கட்சி மாவட்டத்தில் உள்ள வேட்பாளர் பட்டியலை தயார் செய்துள்ளனர். புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பளிக்காமல் பழைய சீனியர்களுக்கும், ஏற்கனவே போட்டியிட்டவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

திமுகவின் ஐ.பி.

திமுகவின் ஐ.பி.

இதேபோல் திமுகவில் மாவட்ட செயலாளர்களாக ஐ.பி.செந்தில்குமார், சக்கரபாணி ஆகியோர் இருந்தாலும் ஒற்றை தலைமையாய் ஐ.பெரியசாமியே உள்ளார். அவர் கைகாட்டும் நபர்தான் மேயராகவோ, நகராட்சி தலைவராகவோ ஏன் வார்டு கவுன்சிலாகவே ஆக முடியும் என்ற நிலை உள்ளது. திமுகவிலும் வேட்பாளர் பட்டியல் 80 சதவீதம் இறுதி செய்யப்பட்ட நிலையில் சிலர் தற்போதே வாக்கு வேட்டையை தொடங்கியுள்ளனர். வலைதளங்களிலும் போஸ்டர் மூலமாகவும் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

வார்டு ஒதுக்கீடு

வார்டு ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் சில வாரங்களில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ள நிலையில் அந்த வார்த்தைகளை திமுகவினர் நேரடியாக போட்டியிடப்போவதாக போஸ்டர்கள் அடித்து கூட்டணிக்குள் சிறு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் உள்ள நிலையில் 25 வார்டுகளில் வெற்றி பெறும் கட்சியே மேயர் பதவியை அலங்கரிக்க முடியும் என்பதால் கூடுதல் இடங்களில் போட்டியிட்ட அதிமுக திமுக முடிவு செய்துள்ளது. குறைந்தது 35 தொகுதிகளில் போட்டியிட்டால் தான் 25 தொகுதிகளை கைப்பற்ற முடியும் என்ற நிலையில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒன்று முதல் பதினைந்து இடங்களுக்குள் மட்டுமே ஒதுக்க திமுகவும் அதிமுகவும் முடிவு செய்துள்ளது.

திமுகவின் திட்டம்

திமுகவின் திட்டம்

திமுக கூட்டணியில் காங்கிரஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் திண்டுக்கல்லில் பலம் வாய்ந்ததாக கூறி மொத்தம் பத்து இடங்களில் போட்டியிட விரும்புவதாகவும், மற்ற கட்சிகள் குறைந்தது 2 இடங்களில் போட்டியிட எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த எண்ணிக்கை படி பார்த்தால் 25 சீட்டுகளை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்க வேண்டிய நிலை திமுகவில் உள்ளது. ஆனால் அதற்கு திமுகவின் ஐ.பெரியசாமி உடன்படவில்லை என கூறப்படுகிறது. 10 முதல் 15 இடங்களை மட்டும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கி பெரும்பாலான தொகுதிகளில் திமுகவை போட்டியிட வைத்து வெற்றி பெற்று மேயர் பதவியை பிடிக்க வேண்டுமென திட்டமிட்டு வருகிறார் ஐபி.

அதிமுக - பாஜக கூட்டணி

அதிமுக - பாஜக கூட்டணி

இதேபோல அதிமுக கூட்டணியில் முக்கிய கட்சியான பாரதிய ஜனதா கட்சி 10 வார்டுகளில் போட்டியிட விருப்பம் உள்ளதாக அக்கட்சியின் மாவட்ட தலைவரான தனபால் அதிமுக கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியை பொறுத்தவரை பாஜகவுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக ஆதரவு இல்லை எனினும் கூட்டணி கட்சிகள் குறைவாக இருப்பதால் 5 முதல் 8 இடங்களை ஒதுக்க அதிமுக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து திண்டுக்கல் மாவட்ட செயலாளரான திண்டுக்கல் சீனிவாசன் என்ன முடிவு எடுப்பார் என பாஜக வினர் ஆர்வத்தோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The BJP has been demanding the AIADMK to allot 10 seats to them in the alliance in the urban local body elections, while the BJP is dissatisfied with the AIADMK's decision to allot only single digit seats. It has been reported that the situation is similar in the DMK alliance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X