காரில் கடத்தி பலாத்காரம் செஞ்சிட்டாங்க! கதறிய மாணவி..பதறிய போலீஸ்! எல்லாமே பொய்யாம்..திடீர் ட்விஸ்ட்
திண்டுக்கல் : தேனி நர்சிங் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி வெளியானது. மாணவி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலிசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், மாணவி அளித்தது பொய் புகார் என்பது தெரிய வந்துள்ளதாக திண்டுக்கல் எஸ்பி பிரதீப் கூறியுள்ளார்.
தேனி மாவட்டத்தை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவியை அடையாளம் தெரியாத மர்ம நம்பர்கள் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து திண்டுக்கல் ரயில் நிலையத்தில் விட்டுச் சென்றுள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தேனி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தேனியில் உள்ள தனியாருக்கு சொந்தமான நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று 23.09.24 காலை தனது சொந்த ஊரில் இருந்து தேனிக்கு பேருந்தில் வந்துள்ளார்.
பழைய பேருந்து நிலையம் அருகே வந்த போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மாணவியை காரில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் மாணவியை அதே காரில் திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே இறக்கி விட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றதாக கூறினார்.
இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவி ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தார். போலீசார் மாணவியை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தற்பொழுது திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கேரளாவை சேர்ந்த மர்ம நம்பர்கள் காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களையும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தேடினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், மாணவியிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
மேற்படி புகாரினை பெற்று விசாரணை செய்த திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண். 16/24 u/s 87, 70(1) BNS வழக்கு பதிவு செய்து மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அவரிடம் திண்டுக்கல் மாவட்ட எஸ்பி நேரிடையாகவே விசாரணை செய்தார். தொடர்ந்து போலீசார், மருத்துவர்களும் மாணவியிடம் தனித்தனியே விசாரித்தனர்.
இந்நிலையில் அம்மாணவி கூறியது போல் எந்தவொரு கடத்தல் மற்றும் பலாத்கார சம்பவங்களும் நடைபெறவில்லை என்பதும், அம்மாணவி மனஅழுத்தம் காரணமாக தவறான புகார் அளித்துள்ளார் என்பதும் தெரியவருகிறது என்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறை தகவல் கூறியுள்ளார்.
-
கொடூரம்.. பெரம்பூர் ஸ்டேஷனில் சூட்கேஸில் இருந்த உடல்.. தலையை செங்கல்பட்டு ஏரியில் மீட்ட போலீசார்! -
சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம்












Click it and Unblock the Notifications