திண்டுக்கல்லில் பிரபல பால் நிறுவனத்தில் நன்கொடை கேட்டு மிரட்டல்.. தமமுக நிர்வாகிகள் மீது வழக்கு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தனியார் பால் நிறுவன ஊழியர்களிடம் மாநாட்டிற்கு 5 லட்சம் நன்கொடை கேட்டு மிரட்டிய புகாரில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது . தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளான திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த முத்து ரத்தினவேல், நிலக்கோட்டை அருகே உள்ள சங்கல்பட்டியை சேர்ந்த முனிச்செல்வம் மற்றும் சிலர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக அரசியல் கட்சிகள் மாநாடு நடத்தும் போது, நன்கொடைகள் கேட்பது வழக்கம். அந்த வகையில் நன்கொடைகள் கேட்பது ஆங்காங்கே நடக்கிறது. ஆனால் சிலர் மிரட்டி பணம் கேட்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. அப்படி ஒரு புகார்தான் திண்டுக்கல்லில் வந்துள்ளது.
திண்டுக்கல் வேடசந்தூர் அருகே உள்ள வடமதுரை மோர் பட்டியில் தனியாருக்கு சொந்தமான பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் ரஞ்சித் யாதவ் (37) திட்ட மேலாளராக வேலை பார்த்து வருகிறார். நாளை ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல்லில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டிற்கு நன்கொடை கேட்டு தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளான திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த முத்து ரத்தினவேல், நிலக்கோட்டை அருகே உள்ள சங்கல்பட்டியை சேர்ந்த முனிச்செல்வம் மற்றும் சிலர் பால் நிறுவனத்திற்கு சென்றுள்ளனர்.
அவர்களை வாட்ச்மேன் சத்தியநாராயணன் என்பவர் தடுத்தும், அத்துமீறி பால் நிறுவனத்திற்குள் நுழைந்து மாநாடு நடத்துவதற்கு பணம் 5 லட்சம் ரூபாய் நன்கொடை கொடுங்கள் என்று ரஞ்சித் யாதவிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் இப்போது எங்களால் பணம் தர முடியாது, அலுவலக மேலிடத்தில் கேட்டு சொல்கிறோம் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் நாங்கள் கேட்கும் போது பணம் தரவில்லை என்றால் உங்கள் பால் நிறுவனத்தை நடத்த விட மாட்டோம் என்று அசிங்கமாக பேசி மிரட்டி உள்ளனர்.
இதுகுறித்து ரஞ்சித் யாதவ் வடமதுரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் முத்துரத்தினவேல், முனிச்செல்வம் உள்ளிட்ட 10 பேர் மீது வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications