27 அமாவாசைல ஆட்சி முடிஞ்சுரும்னு 2 அமாவாசைகள் சொல்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் கிண்டல்
திமுக ஆட்சி 27 அமாவாசையில் முடிந்து விடும் என்று இரண்டு அமாவாசைகள் சொல்வதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்: திமுக ஆட்சி 27 அமாவாசைக்குள் முடிந்து விடும் என்று ஓபிஎஸ், இபிஎஸ் கூறி வரும் நிலையில் அதற்கு பதிலடி கொடுத்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். திண்டுக்கல் மாநகரில் தேர்தல் பிரசாரம் செய்து பேசிய அவர்,
திமுக ஆட்சி 27 அமாவாசையில் முடிந்து விடும் என்று இரண்டு அமாவாசைகள் சொல்வதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது. ஆளும் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அனல் பறக்கும் பிரசாரம் மேற்கொண்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. திமுக ஆட்சி விரைவில் முடிவுக்கு வரப்போவதாக ஓபிஎஸ், இபிஎஸ் கூறுவதால் அதற்கு பதிலடி தரும் வகையில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.

உதயநிதி ஸ்டாலின்
மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பிரசாரம் செய்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின், கடந்த ஒருவாரமாக உதயநிதி ஸ்டாலினை காணவில்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறிவருகிறார். கடந்த வாரம் சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது எனக்கு எதிரே தான் எடப்பாடி பழனிச்சாமி அமர்ந்திருந்தார். டேபிளுக்கு மேலே பார்த்தால் நான் தெரிவேன் டேபிளுக்கு கீழே பார்த்தால் நான் தெரிய மாட்டேன் என்று கூறினார்.

மக்கள் ஆட்சி
தி.மு.க மக்களை சந்தித்து மக்களின் நம்பிக்கை பெற்று மக்களின் செல்வாக்கைப் பெற்று அமைந்திருக்கின்ற மக்களாட்சி இது கூவத்தூரில் டேபிளுக்கு கீழே தவழ்ந்து சென்று சசிகலாவின் காலை பிடித்து ஆட்சி அமைக்கவில்லை. தற்பொழுது நடைபெற்று வருவது மக்கள் ஆட்சி என்று தெரிவித்தார்.

தைரியம் உள்ளதா?
பச்சைப் பொய் பழனிச்சாமி தமிழக சட்டமன்றத்தை முடக்க போகிறார்கள் என கூறி வருகிறார். அவ்வாறு முடக்கினால் மீண்டும் தேர்தல் வைக்க வேண்டும். தைரியம் இருந்தால் தெம்பு இருந்தால் சட்டமன்றத்தை முடக்கிப் பாருங்கள். முடக்கி விட்டு தேர்தலை வைத்து பாருங்கள் அதில் ஒரு இடத்தில் கூட அ.தி.மு.க வெற்றி பெறாது என்றார்.

2 அமாவாசைகள்
27அமாவாசை முடிந்தவுடன் ஆட்சி முடிந்துவிடும் என்று இரண்டு அமாவாசைகள் கூறுகிறார்கள். ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கே தெரியும் இரண்டு அமாவாசைகள் யாரென்று. இவர்களுக்கு எல்லாம் நமது ஆட்சியைப் பற்றி பேச தலைவரைப் பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications