திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிக்சரால் வந்த சிக்கல்! வாயை கொடுத்து வாங்கிக் கட்டிய ஆங்கர்! டிஎன்பிஎல்லை தெறிக்கவிட்ட நாம் தமிழர்!

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: நேற்று திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடந்த டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் வர்ணனை செய்த பெண், சுற்றியுள்ள கிராம மக்களை பற்றி மிகக் கேவலமாக பேசியதாக நாம் தமிழர் கட்சியினர் கிரவுண்டுக்குள் சென்று போராட்டம் நடத்திய நிலையில், அந்த ஆங்கர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

Recommended Video

    யாரை தப்பா பேசுறீங்க... TNPL போட்டியை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் *Tamilnadu

    ஐபிஎல்லை போல் தமிழ்நாடு அளவில் டிஎன்பிஎல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் நடத்தப்படுகிறது. பல இளம் வீரர்களுக்கு இந்த தொடர் மூலம் வாய்ப்பு கிடைக்கும் என சொல்லப்பட்டாலும், பெரும்பாலும் நகர்ப்புற இளைஞர்களுக்கே வாய்ப்பளிக்கப்படுவதாக சிலர் கூறுகின்றனர்.

    இந்த சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், நேற்று திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின.

    டிஎன்பிஎல் போட்டி

    டிஎன்பிஎல் போட்டி

    நெல்லை ராயல் கிங்ஸ் அணி தான் இதுவரை விளையாடியுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று வலுவாக உள்ளதோடு புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த நிலையில், மறுபுறம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. திண்டுக்கல்லில் போட்டி நடப்பது திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு சாதகம் என்பதால், இந்த போட்டியில் வெற்றி பெற்று நெல்லையில் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டும் முனைப்புடன் இருந்தது.

    திண்டுக்கல் டிராகன்ஸ் தோல்வி

    திண்டுக்கல் டிராகன்ஸ் தோல்வி

    இந்நிலையில், 3.15 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டிய போட்டி மழை காரணமாக இன்னும் தொடங்கவில்லை. டாஸ் கூட போடப்படாத நிலையில், மழை காரணமாக போட்டி திட்டமிட்டபடி நடக்குமா என்பதே தற்போது கேள்விக்குறியாகி இருந்தது. பின்னர் போட்டி 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வென்றது.

    சிக்சரால் சிக்கல்

    சிக்சரால் சிக்கல்

    முன்னதாக கிரிக்கெட் போட்டியில் வர்ணனை செய்த பெண் ஆங்கர், மிக சுவாரஸ்யமாக வர்ணனை செய்து கொண்டிருந்தார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த நெல்லை வீரர் ஒருவர் பந்தினை ஓங்கி சிக்சர் அடித்தார். அது பார்வையாளர்கள் அமர்ந்திருந்த கேலரிக்கு வெளியே விழுந்தது. அதனை எடுத்து அங்கு நின்று கொண்டிருந்த ரசிகர்கள் உள்ளே வீசினர். அப்போது "பேசிய அந்த ஆங்கர், நத்தம் போன்ற கிராமங்களில் இருக்கும் மக்களுக்கு எல்லாம் இந்த பந்தோட வேல்யூ தெரியுமா, இது இரு ஊரு இங்கல்லெம் கிரவுண்ட் வச்சுருக்காங்க'" எனக் கூறினார். இதனை நேரலையில் பார்த்துக் கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியினர் கடும் கோபமடைந்து மைதானத்திற்கு படையெடுத்தனர். மேலும் அங்கிருந்த ரசிகர்களும் கூச்சலிடத் தொடங்கினர்.

    நாம் தமிழர் போராட்டம்

    நாம் தமிழர் போராட்டம்

    நத்தம் பகுதி கிராமங்களை பற்றி மிகக் கேவலமான முறையில் கேலி செய்ததை அறிந்த நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் நத்தம் சிவசங்கரன் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு சென்று முற்றுகையிட்டனர். அவர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து காவல்துறை , நிர்வாகத்திற்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தி நிகழ்ச்சி வர்ணனையாளரை காவல்துறை மற்றும் TNPL நிர்வாகம் நிகழ்ச்சி தொகுக்கும் இடத்தில் இருந்து வெளியேற்றினார்கள்.. அதன் பின் தவறை உணர்ந்த நிகழ்ச்சி வர்ணனையாளர் தனது தவறுக்கான மன்னிப்பை கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

    English summary
    The woman who was commenting on the TNPL cricket match at Natham NPR college ground in Dindigul district yesterday said that she had spoken very badly about the surrounding villagers while the Naam Tamil party protested inside the ground, the anchor has apologized.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X