அசத்தல்! சந்திரயான் 3 விஞ்ஞானிகள் குழுவில் திண்டுக்கல் குக்கிராம அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்!
திண்டுக்கல்: சந்திரயான் 3 விஞ்ஞானிகள் குழுவில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி முன்னாள் மாணவர்களான ரவிச்சந்திரன், காமேஷ் குரு ஆகியோரும் இடம்பெற்றிருந்ததை பெருமிதமாக கொண்டாடுகின்றனர் உள்ளூர் மக்கள்.
இந்தியாவின் விண்வெளி ஆய்வுத் துறையின் புதிய சரித்திரமாக நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலம் தரை இறக்கபப்ட்டது. நிலவின் தென் துருவப் பகுதியில் கால் பதித்த முதல் நாடு இந்தியா என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இந்தியாவை தலைநிமிரவைத்த சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சந்திரயான் 3 விஞ்ஞானிகள் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரும் இடம் பெற்றிருக்கும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சந்திரயான்-3 விண்கலம் தொடர்பான பணிகளில் கட்டளைகளை பிறப்பிக்கும் டெலிகமாண்ட் சாப்ட்வேர் வடிவமைப்பாளராக பணிபுரிந்தது திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண் விஞ்ஞானி கெளரிமணி ராமராஜ். இவர் பழனி அருகே கணக்கன்பட்டியைச் சேர்ந்தவர்.
இதேபோல சந்திரயான் 3 குழுவில் இடம் பெற்றிருந்த ரவிச்சந்திரன், காமேஷ் குரு ஆகிய 2 விஞ்ஞானிகள் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சத்திரப்பட்டி வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். அங்கு அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்தார். பழனியில் உள்ள பழனியாண்டவர் பாலிடெக்னிக்கில் டிப்ளமோ பட்டம் பெற்றார். பின் பிஇ, எம்இ என உயர் கல்வி கற்று இஸ்ரோவில் இணைந்தார். தற்போதைய சந்திரயான் 3 குழுவிலும் இடம்பெற்றிருந்தார் விஞ்ஞானி ரவிச்சந்திரன்.
மேலும் திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டியைச் சேர்ந்த காமேஷ் குரு, அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்தார். பின்னர் திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளியில் 12-ம் வகுப்பு கற்றார். இதனைத் தொடர்ந்து பொறியியல் பட்டம் உள்ளிட்டவை பெற்று இஸ்ரோவில் இணைந்தார். தற்போது சந்திரயா 3 விஞ்ஞானிகள் குழுவிலும் இடம்பெற்றுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் சந்திரயான் 3 குழுவில் இடம்பெற்றிருபதை மாவட்ட மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்,
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications