Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூல்ஸ் மாறிடுச்சு.. ஜாலியா பைக்கில் வந்த "மைனர்".. கரெக்ட்டா வந்த திண்டுக்கல் போலீஸ்! போச்சு போச்சு

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: 18 வயது பூர்த்தியடையாதவர்கள் வாகனத்தை இயக்க சட்டப்படி அனுமதி இல்லை.. இதுகுறித்த நடைமுறைகள் அமலில் உள்ள நிலையில், சிறுவர்கள் பைக் ஓட்டுவது தொடர்ந்து வருகிறது. அந்தவகையில் திண்டுக்கல்லில் நடந்த சம்பவத்தை பாருங்கள்.

இந்தியாவை பொறுத்தவரை, சாலை விபத்துக்களை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு விதமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன... விபத்து நடைபெறும் இடங்களை கண்டறிந்து, விபத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளையும், விழிப்புணர்வுகளையும் மேற்கொண்டு வருகின்றன.

Dindigul Traffic Rules Traffic Police

சாலை விபத்துகள்: ஆனாலும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது.. குறிப்பாக, சிறுவர்கள் வாகனங்களை இயக்குவது மட்டுமல்லாமல் சாலையில் பைக் ரேஸ் செல்வதும், சாகசம் என்ற பெயரில் வீலிங் செய்வதும் அதிகரித்து வருகின்றன. இதனால் சாலை விபத்துக்களும் அதிகரித்து வருகிறது. 3 பேர் ஒரே வாகனத்தில் செல்வதும் விபத்தில் சிக்கிக்கொள்ளும் சூழலும் உருவாகி வருகிறது.

சட்டப்படி 18 வயது பூர்த்தியடையாதவர்கள் வாகனத்தை இயக்க அனுமதி இல்லை என்றபோதிலும், சிறுவர்கள் பைக் ஓட்டுவது அதிகரித்தபடியே உள்ளது. எனவேதான், போக்குவரத்து விதிகளில் கூடுதல் விதிகளை அரசு கொண்டுவர முடிவாகியிருக்கிறது. அதன்படி, 18 வயதிற்கு உட்பட்டோர் வாகனம் ஓட்டினால் பல்வேறு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அபராதம்: 18 வயது முடியாத சிறுவர்கள் கார், பைக் ஓட்டினால், அந்த வாகனத்தின் ஆர்.சி. ரத்து செய்யப்படுவதுடன், வாகனம் ஓட்டி பிடிபடும் சிறுவர்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்.. 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுவதுடன், அவர்களுக்கு 25 வயதாகும் வரை ஓட்டுனர் உரிமமும் வழங்கப்படாது என்ற நடைமுறையானது, கடந்த 1ம் தேதி முதல் அமலில் உள்ளது.

சமீபத்தில் புனே நகரில் 17 வயது சிறுவன் போர்ஷ் காரை ஓட்டிச்சென்று இரண்டு பேரை அநியாயமாக ஏற்றிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் அந்த சிறுவன் உடனடியாக விடுவிக்கப்பட்டதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல இன்னொரு ஊரில் சிறுவன் ஒருவன், திடீரென ஆம்புலன்ஸை இயக்கி ஒரு பெண்ணை இடித்துத் தள்ளி காயப்படுத்திய சம்பவமும் நடந்தது.

சிறார்கள்: சிறார்கள் பலர் இப்போது டூவீலர்கள் ஓட்டியும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் புதிய போக்குவரத்து விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளன.

10 நாட்களாக இந்த நடைமுறை அமலில் உள்ள நிலையில், முதல் நபர் சிக்கியிருக்கிறார்.. திண்டுக்கல் நகர் பாலகிருஷ்ணாபுரம் மேம்பால பகுதியில் தாலுகா போலீசார், வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த சிறுவனை மடக்கி விசாரணை நடத்தினார்கள்..

வாகனம்: விசாரணையில், அந்த சிறுவன் பாலகிருஷ்ணாபுரம் சிறுமணி நகரை சேர்ந்த கோபி என்பவரின் மகன் என்பது தெரியவந்தது. இந்த சிறுவனுக்கு வெறும் 14 வயதுதான் ஆகிறது. இதையடுத்து, சிறுவனின் அப்பாவை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்தனர்.. 18 வயது பூர்த்தியடையாத மகனிடம் பைக் தந்தது ஏன் என்று விசாரித்தனர்.. இறுதியில், சிறுவனை வாகனம் ஓட்டுவதற்கு அனுமதித்த குற்றத்திற்காக அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து, அந்த பைக்கையும் பறிமுதல் செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+