Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேடசந்தூரில் ஜெயிச்சா ஆட்சி நமக்கு தான்.. தொடரும் ‘வி’ சென்டிமென்ட்! திமுக வேட்பாளர் யார்? பரபர ரேஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில் தேர்தல் விளையாட்டுகளை உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் தொடங்கிவிட்டனர். அந்த வகையில் தமிழக அரசியலில் சென்டிமென்ட்டான தொகுதியான வேடசந்தூரிலும் வேட்பாளர் ரேஸ் தொடங்கி விட்டது. வேடசந்தூரில் வெற்றிபெறும் கட்சி தான் ஆட்சி அமைக்கும் என்ற சென்டிமென்ட் காரணமா அதிமுகவும் திமுகவும் அங்கு வெயிட்டான வேட்பாளர்களை களம் இறக்க தயாராகி வருகின்றன. வேடசந்தூர் தொகுதியில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜனோடு சேர்ந்து மேலும் 4 பேர் களத்தில் நிற்கின்றனர்.

தமிழகத்தின் சிறப்பு மிக்க தொகுதிகளில் ஒன்று வேடசந்தூர். தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டமான திண்டுக்கல்லில் 7 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. அதில் ஒன்றுதான் வேடசந்தூர். ஆனால் நாடாளுமன்ற தொகுதி இன்று வரும் போது கரூரோடு சேர்ந்து கொள்ளும்.

இப்படி இரண்டு பெரிய மாவட்டங்களுக்கு இடையில் இருப்பதோடு, ஐபி பெரியசாமி, செந்தில் பாலாஜி ஆகியோரது நேரடி கட்டுப்பாட்டில் இந்த தொகுதி இருக்கிறது. காங்கிரஸ், திமுக, அதிமுக மாறி மாறி இந்த தொகுதியில் ஜெயித்திருக்கின்றன. கடைசி மூன்று தொகுதிகளில் திராவிட கட்சிகள் தான் வேடசந்தூரில் ஆதிக்கம் செலுத்துகிறது.

dindigul Vedasandur DMK

வேடசந்தூர் தொகுதி

ஒக்கலிக கவுடா சமூகத்தினர் தான் அதிகமாகவும், அடுத்த பிள்ளைமார் சமுகம், தலித் வாக்குகள் இங்கு இருந்த போதும், ஒக்கலிக கவுடா ஜாதியினர் தான் இங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதுவரை இருந்த எம்எல்ஏக்களில் பெரும்பாலோனோர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சொன்னது போல வேடசந்தூரில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம் என்ற சென்டிமென்ட் காரணமாக அங்கு வெயிட்டான வேட்பாளர்களை களம் இறக்க திமுக - அதிமுக தயாராகி வருகிறது.

திமுக வேட்பாளர் ரேஸ்

தற்போதைய சூழலில் அதிமுக தரப்பில் முன்னாள் எம்எல்ஏவும், அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் விபிபி பரமசிவம் களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதி என்று சொல்கின்றனர். அதே நேரத்தில் திமுகவில் யாரை களம் இறக்கப் போகிறது தலைமை என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஏற்கனவே அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்து எம்பி தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர் காந்திராஜன். தொடர்ந்து நீண்ட இழுபறிக்குப் பிறகு 2021ல் வேடசந்தூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

dindigul Vedasandur DMK

காந்திராஜன் எம்.எல்.ஏ

சமீபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் காலில் அவர் விழுந்தது பெரும் சர்ச்சையானது. வரும் தேர்தலில் தனக்கு வாய்ப்பு கிடைக்காது என்பதால் தான் உணர்ச்சி வசப்பட்டு அவ்வாறு செய்துவிட்டார் என அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தாலும், தலைமைக்கு இந்த விஷயம் சங்கடத்தை ஏற்படுத்தியது. தற்போதைய சூழலில் அவர் மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டாலும், கூடுதல் வாய்ப்பாக மூன்று பேர் களத்தில் நிற்கின்றனர்.

வீரா சாமிநாதன்

அப்படி பார்க்கும்போது செந்தில் பாலாஜியின் தீவிர ஆதரவாளராக கருதப்படும் வீரா சாமிநாதன், வடமதுரை நகர திமுக செயலாளர் 'மெடிக்கல்' கணேசன், வேடசந்தூர் திமுக நகர செயலாளர் கார்த்தி ஆகியோரின் பெயர்கள் அடிபடுகிறது. மூவருமே வேடசந்தூரில் செல்வாக்கு மிக்கவர்கள். வீரா சாமிநாதன் கல்வி நிறுவனங்கள் நடத்தி வருவதோடு, அமைச்சர்கள் ஐ பெரியசாமி, சக்கரபாணி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவராக அறியப்படுகிறார். கடந்த தேர்தலிலேயே அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் அது தள்ளிப்போனது.இருந்த போதும் வேடசந்தூரில் திமுகவில் வெற்றிக்காக பாடுபட்டவர் என்பதால் தலைமையின் கவனத்தைப் பெற்று இருக்கிறார். இந்த முறை அவர் தேர்தலில் களமிறங்கலாம் என சொல்லப்படுகிறது.

வேடசந்தூர் எம்எல்ஏ வேட்பாளர்

அடுத்தபடியாக வடமதுரை நகரக் கழக செயலாளரும், வடமதுரை பேரூராட்சி தலைவரின் கணவருமான மெடிக்கல் கணேசன், வேடசந்தூர் எம்எல்ஏ வேட்பாளருக்கான ரேசில் இருக்கிறார், கிளைச் செயலாளர்ம் இளைஞர் அணி என தொடர்ந்து திமுகவில் பல ஆண்டுகளாக பயணிப்பவர், தொகுதி மக்களிடமும் நல்ல அறிமுகம், இளைஞர்களிடைய செல்வாக்கு என அவர் சக திமுக போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கிறார். சமீபத்தில் நடந்த ஸ்டாலினுடன் ஒன் டூ ஒன் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் பாராட்டியவர்களில் மெடிக்கல் கணேசனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் பேரூராட்சி வார்டு கவுன்சிலராக இருந்த போதும் வேடசந்தூர் பகுதியில் முழுவதும் தனது ஆதரவாளர்கள் வட்டத்தை பெருக்கி வருகிறார். தேர்தல் நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் போட்டிக்கு தயாராகவே இருக்கிறார். அமைச்சர் சக்கரபாண்டியன் குட் புக்கில் இடம் பிடித்ததோடு, ஒக்கலிக கவுடா சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடுமையான போட்டி

இந்த பட்டியலில் அடுத்ததாக இருப்பவர் திமுக வேடசந்தூர் நகர செயலாளரானா கார்த்திகேயன். லோக்கல் பாலிடிக்ஸில் அனுபவம், தொண்டர்கள் பலம், கட்சி தலைமையிடம் செல்வாக்கு என அடுத்த வேட்பாளர் ரேசில் இவரும் இருக்கிறார். வேடசந்தூர் தொகுதி பொறுப்பாளர்களை ஸ்டாலின் சந்தித்தபோது கார்த்தி, மெடிக்கல் கணேசன் ஆகியோரை மட்டும்தான் ஸ்டாலின் பாராட்டியது இவருக்கும் கூடுதல் ப்ளஸ் பாயிண்ட். வேடசந்தூரில் கட்சி சார்பில் பல நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தியவர் என்பதால் வேடசந்தூர் வேட்பாளர் தேர்வில் தொடர்கிறார். இவரது மனைவி வேடசந்தூர் பேரூராட்சி தலைவர் என்பதும், இவர் கவுன்சிலர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக ஸ்டாலின்

ஏற்கனவே வேடசந்தூரில் திமுக நிர்வாகிகளுடன் ஒன் டூ ஒன் முதல்வர் சந்திப்பை நடத்தி முடித்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் வேடசந்தூர் சென்டிமென்டை தெரிந்து கொண்டு வெயிட்டான வேட்பாளரை இறக்க திட்டமிட்டு இருக்கிறார். தற்போதைய சூழலில் இந்த நான்கு பேரும் வேடசந்தூர் வேட்பாளர் பட்டியலில் முதல் நான்கு இடத்தில் இருக்கின்றனர். இவர்களில் 2026 இல் களமிறங்க போவது இன்னும் சில மாதங்களில் தெரிந்து விடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+