சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு மணி மண்டபம்! அமைச்சரிடம் கேட்ட முத்துலட்சுமி! விஜய்யை இப்படியா பேசுவது?

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: சந்தனக் கடத்தல் வீரப்பனை அடக்கம் செய்த இடத்தில் தமிழக அரசு மணிமண்டபம் அமைத்துத் தர வேண்டும் என தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம், வீரப்பனின் மனைவியும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினருமான முத்துலட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார்.

திண்டுக்கல் அருகே சின்னாளபட்டியில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்க, அந்தக் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி வருகை தந்தார்.

veerappan muthulakshmi tamil nadu

அந்த விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமியும் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் முத்துலட்சுமி, தனது கணவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், தமிழக அரசு மணிமண்டபம் அமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்துங்கள் எனக் கேட்டுக்கொண்டார். அதற்கு அமைச்சர் ஐ.பெரியசாமி, "இப்போதும் கூட திராவிட மாடல் ஆட்சியின் நாயகன் ஸ்டாலின், வன்னிய சமுதாயத்தினருக்கு உரிய மரியாதையைக் கொடுத்து அவர்களை மேம்படுத்தி வருகிறார். உங்களின் கோரிக்கையை முதல்வர் கவனத்திற்குக் கொண்டு செல்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விழாவில் முத்துலட்சுமி மேலும் பேசுகையில், "இன்று பலர் தமிழகத்தை ஆளப்போகிறோம் என கனவு கண்டு அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள். நடிகைகளைக் கட்டிப்பிடித்து ஆடி, பணம் சம்பாதித்துவிட்டு இன்று நான்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என மார்தட்டிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு நாம் இடமளிக்கக் கூடாது. தமிழகத்திற்கு வடமாநிலத்தவர்கள் அதிகம் வந்து தமிழர்களின் வேலைவாய்ப்பைப் பறித்து வருகிறார்கள். இதனால் தமிழர்கள் வேலைவாய்ப்புக்காகப் பிற மாநிலங்களுக்குச் செல்லும் நிலை உருவாகி வருகிறது. இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இலங்கையில் எப்படித் தமிழர்களை அழித்து சிங்களர்கள் ஆட்சி செய்கிறார்களோ, அதுபோல் மத்தியில் ஆளும் பாஜக அரசும் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை அழித்து தமிழகத்தில் ஆட்சி செய்ய நினைக்கிறது" என்றார்.

நடிகர் விஜய்யின் பெயரைக் குறிப்பிடாமல், மிகவும் அவதூறாகப் பேசியது த.வா.க.வினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் த.வா.க.வின் கல்வி விருது வழங்கும் விழாவில், வெறும் 2 கிராம் தங்கத்திற்காக தங்கள் பெண் பிள்ளைகளை நடிகர்களைக் கட்டிப்பிடிக்கச் செய்கிறார்கள் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கொச்சையாகப் பேசியிருந்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+