"ஆபாசம்".. திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டிலேயே.. புடவையை ஏத்தி கட்டி.. இப்படி ஒரு பெண்ணா.. சீரழிந்த நபர்

திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் மதுபோதையில் தகராறு செய்துள்ளார் ஒரு பெண்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: பெண் ஒருவர் செய்த ஆபாசம் மற்றும் அதிர்ச்சி செய்கையால், திண்டுக்கல்லே திணறி போயுள்ளது.. அப்படி என்ன நடந்தது?
வீடியோ ஒன்று பரவி வருகிறது... திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. இது ஒரு வணிக நகரம் ஆகும்.. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வடமாநிலங்களில் இருந்து ஏராளமான பயணிகள் வந்து போவார்கள்.

முக்கிய சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது.. அதனால், இந்த பஸ் ஸ்டாண்ட் எந்நேரமும் பிஸியாகவே காணப்படும்..

 வத்தலகுண்டு

வத்தலகுண்டு

அப்படித்தான், கடந்த ஞாயிற்றுக்கிழமையும் பஸ் ஸ்டாண்டில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.. தெற்கு வாசல், மதுரை, தேனி, கொடைக்கானல் வத்தலகுண்டு ஆகிய பஸ்கள் நிற்கும் இடங்களின் வழியாக ஒரு பெண் வந்து நின்றார்.. புடவையை தூக்கி, இடுப்பில் செருகி கொண்டு, தள்ளாடியபடியே நடந்து வந்தார்.. பிறகு அங்கிருந்த ஒரு நபரை சரமாரியாக அடித்து தாக்கினார்.. கெட்ட கெட்ட வார்த்தைகளில், ஆபாசமாக அந்த நபரை திட்டினார்..

 திண்டுக்கல் வீடியோ

திண்டுக்கல் வீடியோ

இதை அங்கிருந்த அனைத்து பயணிகளும் வேடிக்கை பார்த்து கொண்டே நின்றனரே தவிர, யாரும் தடுத்து நிறுத்தவில்லை.. குடிபோதையில் ரகளை செய்த பெண் யார்? அவர் அந்த நபரை ஏன் அடித்தார்? ஏன் மிரட்டினார்? என்று தெரியவில்லை.. ஆனால், அந்த நபரை வம்பிழுத்து, அடித்து நொறுக்கும் பெண் ஆசாமியின் இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் உடனே வைரலாக ஆரம்பித்துவிட்டது. இதற்கு பிறகுதான், திண்டுக்கல் போலீசாருக்கும் தெரியவந்ததையடுத்து, விசாரணையை துவங்கி உள்ளனர்.

 டைமிங் - நேரம்

டைமிங் - நேரம்

இந்த குடியால் எத்தனையோ குடும்பங்கள் மரணங்களை சந்தித்துள்ளன.. நடுத்தெருவுக்கு வந்துள்ளன.. டாஸ்மாக்கை மூடும்படி எத்தனையோ போராட்டங்கள் தமிழகத்தில் நடத்தப்பட்டுள்ளன.. ஆனாலும், தெருத்தெருவாக மதுக்கடைகளை அரசே நடத்தி வருகிறது... டாஸ்மாக் கடை திறக்கும் நேரத்தைகூட, குறைப்பது போல குறைத்து, மறுபடியும் பழையபடியே நேரங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன.. அதனால், காலையிலேயே கடை திறப்பதற்கு முன்பு டாஸ்மாக் கடைகள் முன்பு, வரிசைக்கட்டி மதுப்பிரியர்கள் நிற்கும் அவலம் தொடர்கிறது.

 மதுபோதை

மதுபோதை

இதே தமிழகத்தில், பெண்கள் அனைவரும் திரண்டு போராட்டம் நடத்தி பல டாஸ்மாக் கடைகளை மூட வைத்த வரலாறு நிகழ்ந்துள்ளது.. ஆனால், சில பெண்களே மதுபோதையில் சிக்கி கொண்டுள்ள பரிதாபம் நடந்து வருகிறது.. மூக்கு முட்ட தண்ணி அடித்துவிட்டு, பெண்களை தெருவில் இழுத்து போட்டு அடிக்கும் குடிகாரர்களுக்கு மத்தியில், பெண்களே போதைக்கு ஆளாகி, ஆண்களை நடுரோட்டில் அடிக்கும் அளவுக்கு இந்த சமூகம் சென்று விட்டது.. இதுவா வளர்ச்சி?!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+